ஜார்க்கண்ட்டில் இத்தனை எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்களா?.. முதல் இடத்தில் யாரு இருக்காங்கனு தெரியுமா?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் ஜேஎம்எம் பாஜகவை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 89 சதவீதம் எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களை விட இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (JMM) கட்சி, காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

ஜார்க்கண்டில் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் ஜேஎம்எம் கூட்டணியும், அங்கு எப்படியாவது ஆட்சியை பிடிப்பதற்கு பாஜகவும் தீவிரமாக களமாடின. ஆட்சியைப் பிடிப்பதற்கு 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தேர்தல் முடிவுகளில் ஜேஎம்எம் கூட்டணி 56 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது.
வருகிற 28 ஆம் தேதி ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் ஜார்க்கண்டில் வெற்றி பெற்ற 89 சதவீதம் எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏடிஆர் அமைப்பு (Association of Democratic Reforms) வெளியிட்டுள்ள ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்டில் வெற்றி பெற்ற 81 எம்எல்ஏக்களின் தேர்தல் பிரமாண பத்திரங்களை அந்த அமைப்பினர் ஆய்வு செய்துள்ளனர். அதில் 71 எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது கோடீஸ்வர எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
2019 தேர்தலில் 56 எம்எல்ஏக்களும், 2014 தேர்தலில் 41 எம்எல்ஏக்களும் கோடீஸ்வரர்களாக இருந்தனர். இதில் காஙகிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ்வர் ஓரன் கோடீஸ்வர எம்எல்ஏ பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தேர்தல் பிரமாண பத்திரத்திலேயே அவர் தனக்கு ரூ.42.20 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாஜகவின் குஸ்ஹா ஷாஹி பூஷன் ரூ.32.15 கோடி சொத்துடன் இரண்டாவது இடத்திலும், ஆர்ஜேடி சஞ்சய் பிரசாத் யாதவ் ரூ.29.59 கோடி சொத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்தமுறை ஜேஎம்எம் கட்சியில் 28 எம்எல்ஏக்களும், பாஜகவில் 20 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியில் 14 எம்எல்ஏக்களும் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். ஆர்ஜேடி கட்சியில் 4, சிபிஐ (எம்எல்) 2, எல்ஜேபி,ஜேடியு கட்சிகளில் தலா ஒரு எம்எல்ஏ கோடீஸ்வரராக இருக்கிறார்கள்.
ஜேஎம்எம் 34 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சராசரியாக வெற்றி பெற்ற எம்எலஏக்களின் சொத்து மதிப்பு ரூ.6.90 கோடியாக உள்ளது. இதுவே 2019 தேர்தலில் எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ.3,87 கோடியாக இருந்தது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications