பாலிவுட் நடிகர்களை விட இணையத்தில் ஹிட் அடித்த தாத்தா…
சிம்லா: நாட்டின் மூத்த வாக்காளர் என்று தேர்தல் ஆணையத்தால் கவுரவப்படுத்தப்பட்டுள்ள ஷியாம் சரண் நேகி (97), தோன்றும் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இமாசலப் பிரதேச மாநிலம், கின்னார் மாவட்டத்தின் கல்பா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி. தொடக்கப் பள்ளி ஆசிரியரான நேகி, 1975-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
1951-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை நடைபெற்றுள்ள லோக்சபா தேர்தல்களில் தவறாது வாக் களித்து வந்துள்ளார்.
தற்போது 16-வது முறையாக லோக்சபா தேர்தலில் வாக்களிக்க உள்ளார். இது தவிர 11 முறை சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் கவுரவம்
இவரை பாராட்டும் வகையில் மத்திய தேர்தல் ஆணையத்தின் வைரவிழாவின் போது அப்போதைய ஆணையர் நவீன் சாவ்லா, நேகியின் கிராமத்திற்குச் சென்று அவரை கவுரவித்தார்.

விழிப்புணர்வு விளம்பரம்
வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக நடிகர்கள் அமிதாப் பச்சன், ஆமீர்கான், அர்ஜூன் ராம்பால், தியா மிர்சா மற்றும் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் ஆகியோரை வைத்து வீடியோவை எடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.

வாக்களிப்பதன் அவசியம்
இந்நிலையில், வாக்களிப் பதன் அவசியம் குறித்து ஷியாம் சரண் நேகி கருத்து கூறுவது போன்ற காட்சிகள் அமைந்த பிரச்சார வீடியோவையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்த வீடியோக்கள் இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. நடிகர்களைவிட, நேகிக்கு இணைய பயன்பாட்டாளர்கள் அதிக முக்கியத்துவம் அளித் துள்ளனர்.

பனி படர்ந்த சாலையில்
தள்ளாத வயதிலும் அதிகாலையில் எழுந்து கடமைகளைமுடித்துவிட்டு பனி படர்ந்த சாலையில் கம்பீரமாக நடந்து வருகிறார் தாத்தா நேகி. அவருக்கு மேள, தாளம் முழங்க வரவேற்பு கொடுத்து வாக்களிக்க வைக்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

4 லட்சம் பேர்
நடிகர்களின் வீடியோக்களை பார்த்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கூட தாண்டாத நிலையில், சுமார் இரண்டரை நிமிடம் ஓடக் கூடிய நேகியின் வீடியோவை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications