மோடி ஆட்சியை கவிழ்க்க சு.சுவாமி திட்டமா? பரபரப்பை கிளப்பும் ட்வீட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திட்டமிடுகிறாரா? என்ற கேள்வியுடன் ட்விட்டரில் நடத்தப்பட்டு வரும் கருத்து கணிப்பால் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

A controversy erupts over Tweet against Subramanian Swamy

ட்விட்டரில் @SanghParivarOrg என்ற ஐடியில், 1998-ம் ஆண்டு சோனியா, ஜெயலலலிதாவுடன் இணைந்து நமது முதலாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காரணமாக இருந்தவர் @Swamy39 (சுப்பிரமணியன் சுவாமி). தற்போது நரேந்திர மோடி அரசுக்கு எதிராக அப்படி அவர் திட்டமிடுகிறாரா? - ஆம்; - இல்லை என ஒரு கருத்து கணிப்பு போடப்பட்டிருக்கிறது.

இக்கருத்து கணிப்பில் இதுவரை 39% ஆம் என்றும் 62% பேர் இல்லை எனவும் கூறியுள்ளனர். இக்கருத்து கணிப்பு ட்விட் பகுதியில் இது தொடர்பாக பரபரப்பு விவாதம் நடந்து வருகிறது.

இக்கருத்து கணிப்பு தொடர்பாக பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, அதிகாரப்பூர்வமற்ற ட்விட்டர் பதிவுகள் இவை என குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
A controversy has erupted over the tweet against the BJP Rajya Sabha MP Subramanian Swamy.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற