ஜெட் ஏர்வேஸ் விமான கடத்தல் மிரட்டல் பின்னணியில் விமான பணிப்பெண் காதலன்.. பரபரப்பு தகவல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: காதலியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக காதலன் விமான நிறுவனம் ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார். மும்பையில் மிகவும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த இவர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வெடி குண்டு வைத்து இருப்பதாக கடிதம் ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இவருக்கும், இவர் காதலிக்கும் ஏற்பட்ட சண்டையில் அவர் அப்படி செய்து இருக்கிறார். இவரது காதலி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை செய்வதால் இவர் அந்த நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

இந்த கொலை மிரட்டலை விடுத்த பிஜ்ரு கிஷோர் என்ற நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த இவருக்கு விரைவில் சட்டப்படி கடும் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

 வேலை விசயமாக காதலியுடன் சண்டை

வேலை விசயமாக காதலியுடன் சண்டை

மும்பையில் வசிக்கும் பிஜ்ரு கிஷோர் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். சொந்தமாக நகை கடை வைத்திருக்கும் இவர் தனது காதலியுடன் சில நாட்களாக சண்டை போட்டுக்கொண்டிருந்துள்ளார். மேலும் இவரது காதலி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முக்கிய பணியில் வேலை செய்து வந்து இருக்கிறார். இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் அவர் தனது காதலியை ஜெட் ஏர்வேஸ் வேலையை விட்டுவிட்டு வந்து வீட்டில் இருக்கும் படி கூறியிருக்கிறார். இந்த சண்டை நீண்ட நாட்களாக நீடித்து வந்து இருக்கிறது.

 வித்தியாசமாக பழி வாங்க திட்டம்

வித்தியாசமாக பழி வாங்க திட்டம்

இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு அடுத்து இவர் தனது காதலியை பழிவாங்க திட்டமிட்டு இருக்கிறார். அதற்காக அந்த பெண் வேலை செய்யும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மும்பையில் இருந்து செல்லும் விமானம் ஒன்றில் டிக்கெட் எடுத்து இருக்கிறார். மேலும் இந்த விமானத்தில் பயணித்து அதற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அதன் மூலம் தனது காதலிக்கு பிரச்சனை உருவாக்கலாம் என்றும் முடிவு செய்து இருக்கிறார்.

விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மேலும் விமானத்தில் பயணித்த அவர் பாத்ரூமிற்கு சென்று அங்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதம் ஆங்கிலத்திலும், உருதிலும் இருந்திருக்கிறது. அதில் ''இந்த விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இருக்கிறது. இதில் மொத்தம் 12 தீவிரவாதிகள் இருக்கின்றனர். விமானத்தை உடனடியாக பாகிஸ்தான் நோக்கி திருப்ப வேண்டும். அதற்கு பதிலாக வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் பயணிகளின் மரண ஓலம்தான் கேட்கும். வேறு எங்கு எடுத்து சென்றாலும் விமானம் உடனடியாக வெடிக்கும்'' என்று எழுதப்பட்டிருக்கிறது.

 கைது செய்யப்பட்டார் பிஜ்ரு கிஷோர்

கைது செய்யப்பட்டார் பிஜ்ரு கிஷோர்

இந்த நிலையில் அந்த கடிதத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாத விமான அதிகாரிகள் உடனே விமானத்தை அகமதாபாத்தில் தரை இறக்கினர். இதையடுத்து நடந்த விசாரணையில் பிஜ்ரு கிஷோர் தான் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இவருக்கு விமானத்தை கடத்திய வழக்கின் கீழ் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A millionaire from Mumbai has been arrested for giving a bomb and a hijack threatening for the Jet Airways flight. He done this because he wanted his girlfriend to quit the airline and live with him.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற