இறந்த மகன் உயிர்த்தெழுவான் என்று சடலத்துடன் 11 நாளாக ஜெபம் செய்த மும்பை குடும்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் இறந்த போன மகனின் உடளுக்கு இறுதிச்சடங்கு செய்யாமல் 11 நாட்கள் உடலை பத்திரமாக ஒரு குடும்பம் பாதுகாத்து வைத்து இருக்கிறது. இறந்து போன தங்கள் மகன் உயிருடன் திரும்ப வருவான் எனவும் அந்தக் குடும்பம் சொல்லி வந்து இருக்கிறது.

அந்த குடும்பத்தின் தலைவர் ஆக்டோவியா நோவிஸ் இன்னமும் கூட தன் மகன் உயிருடன் வருவார் என நம்புவதாக கூறியிருக்கிறார். மூன்றாம் நாள் இயேசு உயிர்த்தெழுந்த்து போலவே என் மகனும் உயிர்த்தெழுவான் என கூறிவருகிறார்.

இதை அவர் மட்டும் இல்லாமல் அவரது குடும்பம் மற்றும் அவரது பகுதியில் இருக்கும் நபர்களும் நம்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 புற்று நோய் காரணமாக மரம்

புற்று நோய் காரணமாக மரம்

மும்பையில் 'ஜீசஸ் பார் ஆல் நேசன்ஸ் மினிஸ்ட்ரி' என்ற பெயரில் மிகப்பெரிய கிறிஸ்துவ அமைப்பு நடத்தி வருபவர் ஆக்டோவியா நோவிஸ். இவர் புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற எல்லா விதமான நோய்களையும் பிரார்த்தனைகள் மூலம் காப்பாற்ற முடியும் என கூறி வருகிறார். இந்த நிலையில் இவரது மகன் இரண்டு வாரத்திற்கு முன்பு புற்றுநோயால் மரணம் அடைந்தார். மருத்துவமனையில் பல நாளாக இருந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

 மகன் திரும்ப வருவான்

மகன் திரும்ப வருவான்

இந்த நிலையில் இறந்த அவரது உடலி அடக்கம் செய்யாமல் வீட்டுக்கு கொண்டு சென்று இருக்கின்றனர். வீட்டில் பெரிய பெட்டியில் அலங்காரம் செய்து அவரை படுக்க வைத்து இருக்கின்றனர். மேலும் அவரை சுற்றி மெழுகுவர்த்தி ஏற்றி தினமும் ஜெபம் செய்து இருக்கின்றனர். அந்த குடும்பம் மட்டும் இல்லாமல் அவர்கள் தெருவில் இருக்கும் அனைத்து குடும்பமும் இதில் கலந்து கொண்டு இருக்கிறது.

 உடலை எம்பால்மிங் செய்தனர்

உடலை எம்பால்மிங் செய்தனர்

அவர்கள் தங்கள் மகன் இன்னும் சில நாளில் உயிர்த்தெழுந்து வருவான். அதனால்தான் நாங்கள் பிராத்தனை செய்கிறோம். அவனும் எங்கள் கடவுள் போலவே மறுவாழ்க்கை பெறுவான் என கூறி இருக்கின்றனர். இதற்காக மிக அதிக செலவில் இறந்து போன அவரது உடல் அழுகாமல் இருக்கும்படி 'எம்பால்மிங்' செய்து இருக்கின்றனர். இந்த உடலை கடந்த 11 நாட்களாக வைத்து தினமும் ஜெபம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 போலீஸ் தலையிட முடியாது

போலீஸ் தலையிட முடியாது

இந்த நிலையில் அந்த விஷயத்தை அறிந்த மும்பை காவல் துறை அந்த இடத்திற்கு வந்து அவர்களை எச்சரித்தது. மேலும் அவர்களிடம் ''உங்கள் மத நம்பிக்கையில் எங்களால் தலையிட முடியாது. ஆனால் இறந்தவரின் உடலை வீட்டில் வைத்து இருப்பது சட்டப்படி குற்றம். உடனே உடலை அடக்கம் செய்யுங்கள்'' என்று கூறினர். இதையடுத்து மகனின் உடலை அடக்கம் செய்ய பெற்றோர்கள் ஓப்புக்கொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Christian family in Mumbai has kept the body of their 17-year-old son preserved for the past 11 days. They have a hope that Jesus will bring the life back to their son soon.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற