For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுவல்லவோ மனிதநேயம்.. முடக்குவாதம் பாதித்த சிறுவனுக்கு உணவு ஊட்டும் சிஆர்பிஎஃப் வீரர்- வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீரில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் மதிய உணவு ஊட்டும் காட்சிகள் வைரலாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமா அருகே சிஆர்பிஎஃப் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்களை நோக்கி தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

அந்த தாக்குதலில் ஒருவாகனத்தை இயக்கியவர் வீரர் இக்பால் சிங். இவர் இந்த தாக்குதலில் வீரர்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

<strong>EXCLUSIVE:</strong> சசிகலா டீச்சர் இருந்தால் போதும்.. பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புவோம்.. பூரிக்கும் பெற்றோர் EXCLUSIVE: சசிகலா டீச்சர் இருந்தால் போதும்.. பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புவோம்.. பூரிக்கும் பெற்றோர்

முடக்குவாத சிறுவன்

முடக்குவாத சிறுவன்

இரு மாதங்கள் கழித்து இவர் ஸ்ரீநகரில் உள்ள நவாக்தாலில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் பணியில் இருந்த போது முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை சாலையில் சந்தித்தார்.

மதிய உணவு

மதிய உணவு

அந்த சிறுவனை அழைத்து வந்து இரும்பு கம்பிகளில் உட்கார வைத்தார். இதையடுத்து அவனுக்கு சாப்பிடுவதற்காக தான் வைத்திருந்த மதிய உணவை ஊட்டிவிட்டார்.

வைரல்

வைரல்

பின்னர் சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்ததோடு அவனது வாயையும் துடைத்துவிட்டார். இந்த கட்சிகள் அனைத்தும் வீடியோவாக பதிவாகியுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.

கவுரவம்

கவுரவம்

இதனால் இக்பால் சிங்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த செயலுக்காக அவருக்கு இயக்குநர் ஜெனரல் பாராட்டுச் சான்று வழங்கி கவுரவித்துள்ளார்.

டுவிட்டர்

இந்த வீடியோவை யார் எடுத்தது என்பது குறித்து தெரியவில்லை. வீரமும், இரக்க குணமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன என சிஆர்பிஎஃப் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.

English summary
CRPF Havaldar Iqbal Singh deployed in Srinagar feeds his lunch to a paralytic child. He was driving a vehicle in the CRPF convoy on Feb 14 at the time of Pulwama terrorist attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X