லக்னோவில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து காமெடி நடிகரை நிறுத்திய ஆம் ஆத்மி
டெல்லி: லக்னோவில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜாவித் ஜாப்ரி நிறுத்தப்பட்டுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நாட்டின் முக்கிய தலைவர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தி வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜாவித் ஜாப்ரியை ஆம் ஆத்மி கட்சி களம் இறக்கியுள்ளது.

முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள லக்னோவில் போட்டியிடும் ஒரே முஸ்லிம் வேட்பாளர் ஜாப்ரி தான். ராஜ்நாத் சிங்கிற்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாதது ஆச்சரியம் அளிக்கிறது.
இந்நிலையில் ஆம் ஆத்மியின் கணக்கு தப்பாகத் தான் போகும் என்று கூறப்படுகிறது. ஜாப்ரி லக்னோ பக்கமே சென்றது இல்லை. ஷியா முஸ்லிமான அவருக்கு லக்னோவில் வாக்குகள் கிடைக்காது என்று கூறப்படுகிறது. காரணம் லக்னோவில் சன்னி முஸ்லிம்கள் தான் அதிகம். மேலும் லக்னோவில் உள்ள ஷியா முஸ்லீம்களும் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளதால் ஜாப்ரியின் பாடு திண்டாட்டம் தான்.
அவர் நடிகர் என்பதால் சிலர் அவருக்கு வாக்களிக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications