காப்பி வித் டிடி... ஸாரி, கெஜ்ரிவால்... கட்டணம் ஜஸ்ட் ரூ. 20,000!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் காபி குடிக்க ரூ. 20 ஆயிரம் நன்கொடை வழங்கும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது அக்கட்சி.
கட்சி ஆரம்பித்த குறைந்த காலத்திலேயே டெல்லியில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், கிடைத்த நற்பெயரைத் தொடர்ந்து தக்க வைக்க முடியாமல் சர்ச்சைகளில் சிக்கியது.
இந்நிலையில், அடுத்தாண்டு பிப்ரவரியில் டெல்லி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கான தேர்தல் செலவிற்கான பணத்தை திரட்ட வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது அக்கட்சி.

கெஜ்ரிவாலுடன் விருந்து...
அதன்படி ஏற்கனவே, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுடன் இணைந்து மதிய உணவு மற்றும் இரவு விருந்தில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை மும்பை, பெங்களூரு, டெல்லி நகரங்களில் அரங்கேற்றியது.

செல்ஃபி வித் மப்ளர் மேன்...
அதன் தொடர்ச்சியாக செல்ஃபி வித் மப்ளர் மேன் என்ற திட்டத்தையும் அக்கட்சி அறிவித்தது. அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவாலுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொள்ள ரூ. 500 செலுத்த வேண்டும் என அக்கட்சி அறிவித்தது.

காப்பி வித் கெஜ்ரிவால்...
இந்நிலையில், டெல்லி சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து நன்கொடை மூலமாக திரட்டுவதற்காக 'காப்பி வித் கெஜ்ரிவால்' என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

ரூ. 20,000 கட்டணம்...
இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து தேநீர் அருந்துவதற்கு ரூ.20 ஆயிரம் நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது.

ஏற்பாடு...
இந்த நிகழ்ச்சிக்கு டெல்லியின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பார்தி ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications