யு.ஆர். அனந்தமூர்த்தி மரணத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய பஜ்ரங் தள தொண்டர்கள்!
மங்களூர்: பிரபல எழுத்தாளரும், ஞான பீட விருது பெற்றவருமான யு.ஆர். அனந்தமூர்த்தியின் மறைவை பட்டாசு வெடித்துக் கொண்டாடி அறுவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டுள்ளனர் பஜ்ரங் தளத் தொண்டர்கள்.
வெள்ளிக்கிழமையன்று அனந்தமூர்த்தி மரணமடைந்தார். இதை கர்நாடக மாநிலம் மங்களூரில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது முகத்தை மூடிக் கொண்டு இவர்கள் இப்படிப்பட் அநாகரீகமான செயலில் ஈடுபட்டனர். மேலும் அனந்தமூர்த்திக்கு எதிராகவும் இவர்கள் கோஷமிட்டுள்ளனர்.

உள்ளூர் பஜ்ரங் தளத் தலைவர் ஒருவரது வீடு முன்பு இந்தக் கொண்டாட்டத்தை இவர்கள் நடத்தியுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தளம், பாஜக ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர் அனந்தமூர்த்தி. மேலும் லோக்சபா தேர்தலுக்கு முன்பு, மோடி பிரதமரானால் இந்த நாட்டை விட்டு வெளியேறுவேன் என்றும் அவர் சபதமிட்டிருந்தார். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் தனது நிலையிலிருந்து அவர் மாறினார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொன்னது அது என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால் அனந்தமூர்த்தி மீதான துவேஷத்தை அவரது மரணத்தைக் கொண்டாடி பஜ்ரங் தளத் தொண்டர்கள் வெளிப்படுத்தியது நிச்சயம் அநாகரீகமானது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications