For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுரங்க மாபியா ரெட்டி வீட்டு ரூ500 கோடி ஆடம்பர திருமணத்தில் நடிகர்கள் விஷால், சரத்பாபு பங்கேற்பு

ஜனார்த்தன ரெட்டி வீட்டு திருமணத்தில் நடிகர்கள் விஷால், சரத்பாபு பங்கேற்றனர்.

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூரு: சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டி வீட்டு ரூ500 கோடி ஆடம்பர திருமணத்தில் பங்கேற்காமல் கர்நாடகவின் பல முக்கிய அரசியல் தலைவர்கள் ஒதுங்கிவிட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த நடிகர்கள் சரத்பாபு, விஷால் உட்பட திரை நட்சத்திரங்கள் பலரும் இத்திருமணத்தில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத சுரங்க தொழிலில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததால் கைது செய்யபட்டு சிறறயில் அடைக்கப்பட்டார் ஜனார்த்தன ரெட்டி. தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கும் அவர் மகள் திருமணத்தை ரூ500 கோடிக்கு ஆடம்பரமாக இன்று நடத்தினார்.

எட்டிப் பார்க்காத தலைவர்கள்

எட்டிப் பார்க்காத தலைவர்கள்

நாட்டு மக்கள் ரூ500, ரூ1,000க்கும் அல்லாடும் சூழலில் கருப்பு பண முதலையான ஜனார்த்தன ரெட்டி திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கர்நாடகா பாஜக, காங்கிரஸ் தலைவர்களுக்கு அக்கட்சி மேலிடம் ரகசிய உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால் பெரும்பாலான பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் திருமணம் நடந்த அரண்மனை செட் பக்கமே வரவில்லை.

எதியூரப்பா, பரமேஷ்வர், விஷால்

எதியூரப்பா, பரமேஷ்வர், விஷால்

இருப்பினும் எதியூரப்பா, பரமேஷ்வர் உள்ளிட்ட சிலர் மட்டும் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர். நடிகர்கள் விஷால், சரத்பாபு, நடிகை சரோஜாதேவி உட்பட திரை நடசத்திரங்கள் பலரும் இந்த சுரங்க மாபியா வீட்டு ஆடம்பர திருமணத்தில் பங்கேற்றனர்.

வரமறுத்த நடிகர்கள்

வரமறுத்த நடிகர்கள்

தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் இத்திருமணத்தில் பங்கேற்ற போதும் ராணா, ரவிதேஜா ரெட்டி இதில் கலந்து மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை

சர்ச்சை

கருப்பு பண திமிங்கலமான ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் விஷால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது

English summary
Tamil Actors Sarath Babu and Vishal today attended Gali Janardhan Reddy daughter's wedding.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X