"கையை எங்கே வைத்தான் என சொல்லவே அருவெறுப்பா இருக்கு"! கோழிக்கோடு மால் பாலியல் சீண்டல் குறித்து நடிகை
கோழிக்கோடு: கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் பிரபல மாலில் நடிகையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அடுத்து காவல் துறையினர் பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தினர்.
கொச்சி மற்றும் கண்ணனூருக்கு பெண் போலீஸார் அடங்கிய ஒரு குழு அந்த நடிகைகளிடம் விசாரணை நடத்த சென்றுள்ளது. அது போல் போலீஸாரும் அந்த மாலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின் பாலி. இவர் நடித்த சாட்டர்டே நைட் எனும் மலையாள படம் திரைக்கு வருகிறது. வரும் அக்டோபர் 7ஆம் தேதி இந்த படம் வருகிறது.
இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடைபெறுகின்றன. இந்த படத்தை மலையாள இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாட்டர்டே நைட்
இந்த சாட்டர்டே நைட் படத்தின் பிரமோஷனுக்காக கோழிக்கோட்டில் ஒரு மாலில் கடந்த 27 ஆம் தேதி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகைகளை பார்க்க மாலில் ஏராளமானோர் கூடிவிட்டனர்.

பாலியல் சீண்டல்
அப்போது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு படக்குழுவினர் அங்கிருந்து கிளம்பினர். அப்போது நடிகர், நடிகைகளை அருகே பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர், அந்த நேரம் பார்த்து நடிகையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஒரு ரசிகர் ஈடுபட்டதை கண்ட சக நடிகை அந்த நபரை பளார் என அறைந்தார்.

வாக்குமூலம்
இந்த சம்பவம் குறித்து படக்குழுவினர் பன்தீரன்காவு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதன்படி அந்த காவல் நிலைய போலீஸார் விழாவில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகளிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அந்த விழாவில் நடந்தது குறித்து நடிகை தனது சமூகவலைதள பக்கத்தில் கூறுகையில், கோழிக்கோடு மாலில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பினோம்.

கூட்டத்திலிருந்து இழுத்த நபர்
அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் என்னை இழுத்தது போல் இருந்தது. அந்த நபர் என்னை எந்த இடத்தில் கை வைத்தார் என சொல்வதற்கே அருவறுப்பாக இருந்தது. இது வரை எத்தனையோ பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளோம். இது வரை இப்படி நடந்ததே இல்லை. என்னுடன் வந்த சக நடிகைக்கு இதே போன்ற சீண்டல் நடந்தது. அவர் உடனடியாக அடித்துவிட்டார். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாமல் அப்படியே அதிர்ச்சியில் நின்று விட்டேன் என தெரிவித்திருந்தார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications