ஏ.ஆர்.ரஹ்மான் மீதான ஹிந்திவாலாக்கள் கோபத்தில் ஏதாவது லாஜிக் இருக்கா பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்து தாங்கள் செலுத்திய டிக்கெட் கட்டணத்தை திருப்பி அளிக்குமாறு டுவிட்டரில் கோரிக்கை வலுத்து வருகிறது.

ஏஆர் ரஹ்மான் லண்டனின் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் கடந்த வாரம் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். "நேற்று இன்று நாளை" என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான தமிழ், வட இந்திய ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க லண்டனில் வாழும் தமிழர்களுக்காக நடத்தப்பட்டதால் அவர் தமிழிலேயே பேசினார். நிகழ்ச்சியிலும் தமிழ் பாடல்களையே பாடினார்.

 பாதியில் வெளியேறினர்

பாதியில் வெளியேறினர்

எனினும் இந்தியிலும் சில பாடல்களை பாடினாலும் வட இந்தியர்கள் அதிருப்தி அடைந்தனர். பின்னர் நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினர். தமிழ் பாடல்களை பாடியதற்காக டுவிட்டரில் கண்டனங்களையும் பதிவிட்டனர்.

டுவிட்டரில் பதிவு

இந்நிலையில் பல ரசிகர்கள் நிகழ்ச்சிக்காக தாங்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பி அளிக்குமாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய இந்தி ரசிகர்களை கண்டித்தும் டுவிட்டரில் கருத்துகள் வலம் வருகின்றனர். அதில் ரஹ்மான் மீதான குற்றச்சாட்டுகளும் அதற்கான பதில்களும் கேள்வி பதில்கள் வடிவில் உள்ளன.

 நியாயமற்றது

நியாயமற்றது

கேள்வி- ரகுமான் தனது பாலிவுட் ரசிகர்களை பற்றி கவலைப்பட்டாரா?
பதில்- இது நியாயமற்ற குற்றச்சாட்டு. ஏனெனில் இசைக்கு மொழி கிடையாது.
கேள்வி- தவறான விளம்பரம் செய்து ஆள்சேர்த்துவிட்டு, இந்தியில் சில பாடல்களே பாடப்பட்டன
பதில்- 'நேற்று இன்று நாளை' என்று பெயரிடப்பட்ட நிகழ்ச்சியில் இந்தி பாடல்களுக்கு முக்கியத்துவத்தை எதிர்பார்க்க முடியுமா?

 சென்னையின் மொசார்ட்

சென்னையின் மொசார்ட்

கேள்வி- பாலிவுட்டில் பெயர் பெற்ற ரஹ்மானிடம் இருந்து இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
பதில்- அவர் மெட்ராஸ் மொசார்ட் என பெயர் பெற்றவர். மும்பை மொசார்ட் அல்ல.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A concert that musician A R Rahman played in London last week, some north Indians want refund in twitter for playing Tamil songs.
Please Wait while comments are loading...