"பெண்மை போற்றுவோம்”- முற்றிலும் பெண் ஊழியர்களுடன் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானங்கள்
டெல்லி : இன்று சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடப்படுவதை முன்னிட்டு டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு விமானி உட்பட முற்றிலும் பெண் ஊழியர்களை கொண்ட ஏர் இந்தியா விமானம் நேற்று முன் தினம் புறப்பட்டது.
முற்றிலும் பெண் ஊழியர்களை கொண்ட விமான சேவையில் இதுவே மிக நீண்ட தூர பயணமாகும்.
மும்பை - சான்பிரான்சிஸ்கோ இடையிலான பயண நேரம் 15 மணி நேரத்துக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லோருமே பெண்கள்:
வரலாற்று சிறப்பு மிக்க டெல்லி சான்பிரான்சிஸ்கோ விமானத்தில் 4 விமானிகளும், பணிப்பெண்கள் உள்ளிட்ட 14 ஊழியர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் பெண்கள். இந்த விமானம் இன்று மீண்டும் டெல்லி திரும்ப உள்ளது.

பெண்களுக்கான அடையாளம்:
இதுகுறித்து ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஷ்வனி லொஹானி, "சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானம், பெண்கள் அதிகாரம் பெறச் செய்துள்ளதற்கு ஓர் அடையாளமாக இருக்கும்.

வரலாற்றுச் சிறப்பு பயணம்:
முற்றிலும் பெண் ஊழியர்களை கொண்ட விமான சேவையில் இதுவே மிக நீண்டதூர சேவை என்பதால் இது வரலாற்று சிறப்பு மிகுந்த பயணமாக இருக்கும்" என்றார்.

தமிழகத்திலும் கூட:
தமிழகத்தில் இருந்தும் பெண்களே இயக்கிய ஏர் இந்தியாவின் 2 விமானங்கள் இன்று காலை சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றன. அதே போன்று பெண்களே இயக்கும் சென்னையிலிருந்து மும்பை செல்லும் விமானம் காலை 8.45 மணிக்கு புறப்பட்டது.

சுதர்சனின் மணல் சிற்பம்:
இந்நிலையில் இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணற்சிற்பம் ஒன்றை வரைந்துள்ளார். இதனை பூரி கடற்கரைக்கு வரும் அனைவரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications