For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகான உடைகளில் வசீகரிக்கும் பிரதமர் மோடி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய அரசியல் தலைவர்களில் விதவிமான உடைகளில் அசத்துபவர் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியின் போது அவர் அணிந்திருந்த சந்தன நிற உடை அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

விதவிதமாக உடுத்துவதில் ஆர்வம் காட்டும் நரேந்திர மோடிக்கான உடைகளை வடிவமைப்பது யார் தெரியுமா? ஆமதாபாத்தை சேர்ந்த பிபின், ஜிதேந்திரா சவுகான்.

நரேந்திரமோடிக்கு மோடிக்கு கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக இவர்கள்தான் உடைகளை வடிவமைத்து தருகிறார்கள். சரியான அளவில், வடிவமைப்பில் உடைகள் அணிய வேண்டும் என்பதில் மோடி மிகுந்த ஆர்வம் காட்டுவாராம்.

30 ஆண்டுகாலமாக ஆடை வடிவமைப்பு

30 ஆண்டுகாலமாக ஆடை வடிவமைப்பு

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பிரசாரகராக இருந்தகாலம்தொட்டு, ஏறத்தாழ 30 ஆண்டுகளாக மோடிக்கு பிபின், ஜிதேந்திரா சவுகான்தான் உடைகள் வடிவமைத்து தருகிறார்கள்.

எதிலும் ஒரு வசீகரம்

எதிலும் ஒரு வசீகரம்

‘‘கண்கள், குரல், உடைகள் இந்த மூன்றிலும் நான் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று ஒரு முறை மோடிஜி என்னிடம் கூறினார்'' என்கிறார் பிபின்.

பேஷனுக்கு ஏற்ற ஆடை

பேஷனுக்கு ஏற்ற ஆடை

அரசியல், ஆட்சி என்று எப்போதுமே மோடி பரப்பாக இருப்பதால் அடிக்கடி அவரை சந்திப்பது சாத்தியமில்லை என்றாலும் வருடத்துக்கு இரண்டு முறை சந்தித்து உடை வடிவமைப்பு, மாறிவரும் பேஷன்கள், செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுத்து விடுவார்கள்.

விதவிதமான உடைகள்

விதவிதமான உடைகள்

ஒரு நாளில் எத்தனை விழாக்கள், நிகழ்ச்சிகள் என்றாலும் அத்தனைக்கும் விதவிதமான உடைகள்தான் மோடி அணிவார்.

கதரும் பட்டுத்துணிகளும்

கதரும் பட்டுத்துணிகளும்

மோடிக்கு கதர், லினன், பகல்பூர் பட்டுத்துணிகளில் உடைகள் வடிவமைத்து அணிவதில்தான் கொள்ளை ஆசை.

அங்கவஸ்திரம் அணியும் மோடி

அங்கவஸ்திரம் அணியும் மோடி

ஜாக்கெட், அங்கவஸ்திரம், டி சர்ட், சூட்டுகள் அணியவும் மோடிக்கு பிடிக்கும் என்கிறார்கள் பிபின், ஜிதேந்திரா சவுகான் சகோதரர்கள். தனக்கு தேவையான அங்க வஸ்திரங்களை அவரே தனிப்பட்ட முறையில் இன்றைக்கும் தேர்வு செய்வாராம்.

குர்தா சுடிதார்

குர்தா சுடிதார்

மோடியின் ‘டிரேட் மார்க்' உடை அரைக்கை குர்தா, சுடிதார். ஆரம்ப காலத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்ட குர்தாக்களில் ஆர்வம் காட்டிய மோடி இப்போது ஆர்வம் காட்டுவது சாதாரண குர்தா. பெரும்பாலும் காவி, வெள்ளை நிற குர்தாக்களை அணிந்து வந்த மோடி இப்போதுதான் பிற நிற குர்தாக்களையும் விரும்பி அணிகிறார். எப்படி இந்த உடை மீது மோடிக்கு நாட்டம் வந்தது? என்பது சுவாரஸ்யம்.

எளிதான உடை

எளிதான உடை

துறவிபோல சுற்றித்திரிந்த காலத்தில் கையில் ஒரு துணிப்பையைத்தான் மோடி எடுத்துச்செல்வார். அதில் அரைக்கை குர்தாக்கள் என்றால் கூடுதலான எண்ணிக்கையில் வைக்கலாம் என்பதாலும், அவரே உடைகளை சலவை செய்து வந்ததால் சலவைக்கும் எளிது என்பதாலும் அரைக்கை குர்தாக்களை விரும்பி அணிய ஆரம்பித்தார்.

மோடி குர்தா பேஷன்

மோடி குர்தா பேஷன்

இப்போது இந்த ‘மோடி குர்தா' பேஷனாகி விட்டதாம். இந்த பிபின், ஜிதேந்திரா சவுகான் சகோதரர்கள் மோடியின் அனுமதியுடன் ‘மோடி குர்தா' என்ற பெயரில் வடிவமைத்து வியாபாரம் பட்டையை கிளப்புகிறதாம்.

பட்டையை கிளப்பும் விற்பனை

பட்டையை கிளப்பும் விற்பனை

இப்போது மோடி பிரதமராகி விட்டதால் மோடி குர்தா விற்பனை இரு மடங்காகி விடும் என எதிர்பார்க்கிறார்கள் இந்த சகோதரர்கள்.

உடையில் தனி அக்கறை

உடையில் தனி அக்கறை

எத்தனை பரபரப்புக்கு மத்தியிலும் மோடி தான் அணிகிற உடையின் நிறம், துணி, வடிவமைப்பு என ஒவ்வொன்றிலும் அக்கறை செலுத்த தவறுவதே இல்லை என்கிறார்கள் பிபின், ஜிதேந்திரா சவுகான்.

English summary
Bipin Chauhan, MD of Jade Blue, a leading manufacturer and retailer of men’s apparel, first made the “Modi kurta” in 2010. After the half-sleeved “kurtas” worn by BJP’s prime ministerial candidate Narendra Modi caught attention last year; his Ahmedabad-based dressmaker is all set to launch a new collection of “Modi jackets”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X