For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாண்புமிகு அம்மா.. ஆட்சேபித்த திருச்சி சிவா.. குறுக்கிட்ட ரவிசங்கர் பிரசாத்.. ராஜ்யசபாவில் அமளி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் கைது செய்யப்படுவது குறித்து எழுந்த விவகாரத்தில் ராஜ்யசபாவில் தி.மு.க.- அ.தி.மு.க., இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

"தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை, கச்சத்தீவு மீட்பில் முடிவு ஏற்படாமல் உள்ளது" என்று ராஜ்யசபாவில் இன்று நடந்த விவாதத்தின்போது தி.மு.க எம்.பி., திருச்சி சிவா பேசினார்.

Aiadmk and Dmk MPs exchange fire of words in Rajyasabha

இதற்கு பதிலடி அளித்து அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசுகையில் "மாண்புமிகு அம்மா இது தொடர்பாக மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் பல முறை கடிதம் அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் மாநில அரசின் தெளிவான நிலையை தெரிவித்துள்ளோம்" இவ்வாறு நவநீதகிருஷ்ணன் பேசிக்கொண்டிருக்கும் போது, திருச்சி சிவா குறுக்கிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எழுந்து கடும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து அவைத்தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறுக்கீட்டினை தொடர்ந்து அமைதி ஏற்பட்டது.

உத்தரபிரதேச கவர்னர் ராம்நாயக், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சு பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த பிரச்சனை லோக்சபாவில் இன்று எழுப்பபட்டது.

English summary
Aiadmk and Dmk MPs exchange fire of words in Rajyasabha when the Tamil fishermen issue was discussed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X