என்னங்க சொல்றீங்க.. விமான விபத்தில் தப்பிய விஸ்வாஸ் குமார்!கடவுளாய் காத்த 11 ஏ சீட்! ராசியில்லையாமே!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏஐ 171 விமானம் விபத்துக்குள்ளானதில், 241 பேர் பலியாயினர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். அவர் அமர்ந்திருந்தது 11 ஏ இருக்கை ஆகும். விமானம் விபத்தில் சிக்கிய போது குதித்து அவர் தப்பிய நிலையில், காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து 11 ஏ இருக்க ராசியானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் அந்த இருக்கையை ராசியில்லாத இருக்கை என பயணிகள் கருதுகின்றனராம்..

கடந்த 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான ஏஐ 171 போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் வகையைச் சேர்ந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்து உள்ளானது.

விமானத்தில் இரண்டு விமானிகள், பத்து விமான ஊழியர்கள் உள்ளிட்ட 242 பேர் பயணித்த நிலையில் அதில் ஒருவரை தவிர அனைவருமே உயிரிழந்தனர். புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Air India accident Ahmedabad

ஏர் இந்தியா விபத்து

மிகப்பெரிய அளவு சத்தத்துடன் விமானம் விழுந்த நிலையில் அதில் இருந்த பயணிகள் பலியாகினர். இந்த விமானத்தில் 169 இந்திய பயணிகளும், 53 இங்கிலாந்து பயணிகளும், கனடா மற்றும் போர்த்துக்கீசை சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளனர். அதில் 11 ஏ இருக்கையில் அமர்ந்திருந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் உயிர் தப்பினார்.

AI171 விமானம்

அவர் அமர்ந்திருந்த 11 ஏ இருக்கை அவசர வெளியேற்றத்திற்கான கதவுக்கு அருகே அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. விமானம் விழுந்த போது அவசர கால கதவு உடைந்து திறந்ததாகவும், அதிலிருந்து குதித்து தப்பியதாக விஸ்வாஸ் குமார் கூறியிருந்தார். மேலும் போயிங் 787 விமானங்களில் பயணத்தின் போது அவசர காலங்களில் அந்த இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் வெகு விரைவாக விமானத்திலிருந்து தப்புவதாக நம்பப்படுகிறது.

11ஏ ராசியான இடம்

இதை அடுத்து 11 ஏ அதிர்ஷ்டகரமான இருக்கையாக தற்போது விமான பயணிகளால் நம்பப்படுகிறது. ஆனால் இந்த இருக்கையை ஐரோப்பிய பயணிகள் மிகவும் வெறுப்பார்களாம். ஐரோப்பாவில் இயக்கப்படும் போயிங் 737 ரக விமானங்கள் போயிங் 787 விமானங்களைப் போலவே இருக்கும். அந்த விமானங்களில் 11 ஏ இருக்கை லக்சுரி வகுப்புக்கு அடுத்தபடியாக, அதாவது எக்கனாமி வரிசையில் முதல் இருக்கையாக இருக்கும்.

11 a வெறுக்கப்படும் இருக்கை

ஜன்னலை ஒட்டி இருக்கும் இந்த இருக்கையை பெரும்பாலான ஐரோப்பியர்கள் விரும்புவதில்லையாம். காரணம் அந்த இருக்கை அமைந்திருக்கும் இடம் வசதியாக இருக்காது, இருக்கையை மடக்கி ஓய்வெடுப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பதால் பெரும்பாலான ஐரோப்பிய பயணிகள் அந்த இருக்கையை தவிர்த்து விடுவார்களாம். அதனால் 11a வெறுக்கப்படும் இருக்கையாக இருக்கிறது. ஆனால் அந்த இருக்கை தான் விஸ்வாஸ் குமார் ரமேஷின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.

ஆச்சர்யம்

இதை அடுத்து தற்போது போயிங் 787 விமானத்தில் பயணிப்பவர்கள் 11 ஏ இருக்கையை பெரும்பாலான பயணிகள் விரும்பி தேர்ந்தெடுத்து வருகிறார்களாம். ஆனால் தற்போது வரை ஐரோபிய பயணிகள் அதனை விரும்புவதில்லை என்ற தகவல் சமூக வலைதள பயனர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+