பிரான்ஸ் அதிபருடனான மதிய விருந்துக்கு சிவப்பு சேலையில் சூப்பரா வந்த ஐஸ்வர்யா ராய்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் குடியரசு தினத்தன்று பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மதிய விருந்து நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் சிவப்பு நிற பட்டுப்புடவையில் அசத்தலாக கலந்து கொண்டார்.

67வது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஹாலண்டேவுக்கு டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதர் பிரான்காய்ஸ் ரிச்சியர் மதிய விருந்து அளித்தார்.

அந்த நிகழ்ச்சிக்கு பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அழைப்பு விடுத்திருந்தார் ரிச்சியர்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ராய் விருந்து நிகழ்ச்சிக்கு சிவப்பு நிற பனாரஸ் பட்டுப்புடையில் மிகவும் அழகாக வந்திருந்தார்.

டிசைனர் சேலை

டிசைனர் சேலை

ஐஸ்வர்யா அணிந்திருந்த சேலையை ஸ்வாதி மற்றும் சுனைனா ஆகியோர் வடிவமைக்க பனாரஸில் உள்ள பாரம்பரியமிக்க நெசவாளர்களால் நெய்யப்பட்டுள்ளது.

பிசி

பிசி

சரப்ஜித் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பில் பிசியாக இருப்பினும் ரிச்சியர் அழைத்ததால் இயக்குனரிடம் அனுமதி பெற்று விருந்திற்கு வந்துள்ளார் ஐஸ். ஹாலண்டேவுக்கான சிறப்பு விருந்தில் கலந்து கொண்ட ஒரே திரையுலக பிரபலம் ஐஸ் தான்.

படம்

படம்

ஐஸ்வர்யா ராயும், ஹாலண்டேவும் சினிமா, கேன்ஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளனர். பிரான்ஸ் அரசின் நைட் ஆப் தி ஆர்டர் ஆப் ஆர்ட்ஸ் அன்ட் லெட்டர்ஸ் விருது பெற்றவர் ஐஸ்வர்யா.

பாரீஸ்

பாரீஸ்

ஐஸ்வர்யா நடித்த ஹாலிவுட் படமான பிங்க் பான்த்தர் 2வின் படப்பிடிப்பு பாரீஸில் தான் நடந்தது. பிரான்ஸை சேர்ந்த அழகுசாதன பொருட்கள் விற்கும் நிறுவனமான லாரியலின் பிராண்ட் அம்பாசிடர் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+