For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.எஸ்.ஐ.எஸ்- அல்கொய்தா கூட்டாக இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த சதி!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா மீது ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாத இயக்கங்கள் இணைந்து தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

Al Qaeda-ISIS may launch joint terror attack on India: NSG chief

இது தொடர்பாக உளவுத்துறை தெரிவித்துள்ள தகவல்கள்:

  • ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தப் போவதாக செப்டம்பர் 4-ந் தேதி முதல் 3 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
  • இந்தியா மீது இந்த இரு இயக்கங்களும் இணைந்து தாக்குதல் நடத்தும் சாத்தியங்களை மறுக்க முடியாது.
  • ஈராக், சிரியாவில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டவர் மீது தாக்குதல் நடத்துவதான் இந்த இயக்கங்களின் நோக்கம்.
  • குறிப்பாக கோவா, ராஜஸ்தான் போன்ற சுற்றுலா தலங்களில் உள்ள வெளிநாட்டவர்தான் தீவிரவாத இயக்கங்களின் இலக்காக இருக்கும்.
  • இந்தியாவில் தீபாவளி முக்கிய பண்டிகைக் காலம். இக்காலத்தில் தாக்குதல் நடத்துவதில் பல தீவிரவாதி இயக்கங்கள் முனைப்பு காட்டுகின்றன.
  • லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம், 2008ஆம் ஆண்டு கோவாவை பலமுறை வேவு பார்த்து தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் லஷ்கர் தீவிரவாதி கைது செய்யப்பட்ட நிலையில் இத்திட்டத்தை அந்த இயக்கம் கைவிட்டது.
  • சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-ன் கொழும்பு பிரிவு கண்காணித்து வருகிறது. அண்மையில் கைது செய்யபட்ட பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜன், சென்னை மற்றும் பெங்களூரில் எங்கெல்லாம் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்பதை தெரிவித்திருக்கிறான்.
  • அதேபோல் கைது செய்யப்பட்ட தீவிரவாதி தெஹ்சின் அக்தர் மூலம் ராஜஸ்தானில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிப்பாக அமெரிக்கா நாட்டவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
English summary
IB sources said that warned of a joint plan by al Qaeda and ISIS to target Indian cities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X