எடுக்க எடுக்க வந்த தங்கம்.. ஏர் இந்தியா விமானம் நொறுங்கிய இடத்தில்.. நடந்த ஷாக் தரும் சம்பவம்!
அகமதாபாத்: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தில் கொத்து கொத்தாக தங்க நகைகள் மீட்கப்பட்டு உள்ளன.
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது. லண்டன் நோக்கிச் சென்ற விமானம், பி.ஜே மருத்துவக் கல்லூரி அருகே குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவர் தவிர மற்ற அனைவரும், தரையில் இருந்த பலரும் உயிரிழந்தனர்

விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராஜு படேலின் உதவி
விபத்து நிகழ்ந்த சில நிமிடங்களில் கட்டுமானத் தொழிலாளர் ராஜு படேல், தனது குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். "முதலில் 15 முதல் 20 நிமிடங்களுக்குள் நெருங்க முடியவில்லை. தீ மிகவும் தீவிரமாக எரிந்தது.. ஆனால் தீயணைப்பு வீரர்களும், 108 ஆம்புலன்ஸும் வந்ததும், நாங்கள் உதவி செய்ய களத்தில் இறங்கினோம்."
அப்போது காயம் அடைந்தவர்களை எடுத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர்கள் இல்லாததால், புடவைகளை மற்றும் பெட்ஷீட்களைப் பயன்படுத்தினர். எங்களால் முடிந்ததைச் செய்தோம் என்று அவர் தெரிவித்தார். நாங்கள் கொத்து கொத்தாக தங்க நகைகளை மீட்டோம்.. அதை அதிகாரிகளிடம் வழங்கினோம் என்று அவர் கூறி உள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் ராஜு படேலின் துணிச்சலான செயல்
தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினர், விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை கவனமாக ஆய்வு செய்தனர். அதில் கருகிய நிலையில் எரிந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அந்தப் பொருட்களில் இருந்து, 70 தோலா (950 கிராமுக்கு மேல்) தங்க நகைகள், 80,000 ரூபாய் பணம், பாஸ்போர்ட்கள் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை மீட்டெடுத்தனர். இவை அனைத்தும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த தங்க நகைகளின் இந்திய மதிப்பு 1,00,05,000.00 ரூபாய் என்று தெரிவித்துள்ளனர் .
ராஜு படேல், விபத்து நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது மட்டுமல்லாமல், அவர்களின் உடைமைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கவும் உதவினார்.
உடலில் ஒட்டிய தங்கம்
அதேபோல் பல பெண்களின் உடலில் தங்கம் உருகி ஒட்டி இருந்ததாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். அதில், இந்த விபத்து எந்த அளவிற்கு மோசமானது என்றால்.. இறந்தவர்களின் ரத்தம் சூடாக இருந்தது. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. பலருக்கு பிரேத பரிசோதனை தொடங்கியதே கிட்டத்தட்ட 24 மணி நேரம் கழித்தே. அப்போதும் கூட ரத்தம் சூடாக இருந்தது . குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் தனி உதவியாளர் ஒரு டிஜிட்டல் பல் ரேடியோகிராஃபை எடுத்து வந்தார். ரூபானி அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார், அவரது உடலை செயற்கை பற்கள் மூலம் அடையாளம் கண்டனர். மேலும் சில செயற்கை பற்கள் அடையாளங்காட்டியாக இருந்தன. ஒரு பெண்மணிக்கு உலோக செயற்கைப் பல் இருந்தது, இன்னொருவருக்கு பீ.எஃப்.எம் (உலோகத்துடன் கலந்த பீங்கான்) செயற்கைப் பல் இருந்தது.
சிலரை மட்டும் அடையாளம் காண்பது எளிதாக இருந்தது, நகைகள் இருந்தன, ஆடைகளின் நிறத்தை வைத்துக்கூட கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் பலருக்கு நகை வெப்பத்தில் உருகி உடலோடு ஒட்டி இருந்ததால் அதை வெட்டி எடுக்க வேண்டியதாகிவிட்டது, என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications