தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்க.. மேற்கு வங்க பிரச்சாரத்தில் மமதாவுக்கு அமித்ஷா பகிரங்க சவால்
கொல்கத்தா: தன்னை கைது செய்ய தைரியம் உள்ளதா என்று, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு, பாஜக தலைவர் அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பேசியதாவது: நான் மேற்கு வங்காளத்தில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை மமதா பானர்ஜி அரசு ரத்து செய்துவிட்டது. உரிய அனுமதி தரவில்லை.

நான் மூன்று இடங்களில் இன்று பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால் மம்தா பானர்ஜியின் உறவுக்காரர் போட்டியிடக்கூடிய தொகுதியில் எனக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அவர் தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதற்காக, மமதா பானர்ஜி இவ்வாறு செய்துள்ளார்.
ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லிவிட்டு, கொல்கத்தாவிலிருந்து நான் கிளம்புகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள். மம்தா பானர்ஜி ஆட்சிகாலத்தில் துர்கா பூஜைக்கு உரிய அனுமதி கொடுக்கபடவில்லை. இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.
மம்தா பானர்ஜி சென்ற கான்வாய் அருகே நின்று பாஜக தொண்டர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டதால் மமதா, தனது காரில் இருந்து இறங்கி வந்து அவர்களை கைது செய்து விடுவேன் என்று எச்சரித்தார். இந்த வீடியோ வைரலாக சுற்றி வந்தது. இதை கண்டித்து கடந்த வாரம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, இந்தியாவின் கலாச்சாரத்தில் ராமபிரான் ஒரு அங்கம். யாராவது அவரது பெயரை உச்சரிப்பதை தடுத்து விட முடியுமா?
ஜெய் ஸ்ரீராம் என்று இந்தியாவில் பேசாமல், பாகிஸ்தானில் பேச முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அதேநேரம் இதற்கு பதில் அளித்து பேசிய மமதா பானர்ஜி, மேற்குவங்காளத்தில் ஜெய் துர்கா மாதா என்று தான் சொல்வோம் எனக் கூறினார்.
இதற்குத்தான் துர்கா பூஜைக்கும், மம்தாபானர்ஜி ஆட்சிகாலத்தில் அனுமதி வழங்கவில்லை என்ற சம்பவத்தை நினைவுபடுத்தி அமித்ஷா என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications