For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாமியே, சரணம் ஐயப்பா...அன்புமணி ராமதாஸ் சபரிமலை பயணம்

Google Oneindia Tamil News

Recommended Video

    அன்புமணி ராமதாஸ் சபரிமலை பயணம்- வீடியோ

    சபரிமலை: பா.ம.க. இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    கடந்த சில மாதங்களாக தாடியுடன் இருந்த அன்புமணி ராமதாஸ், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தார். கன்னிசாமியான அவர் நேற்று விமானம் மூலம் கேரளா புறப்பட்டு சென்றார். தனது அம்மாவுக்காக மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வதாக அன்புமணி கூறியுள்ளார்.

    anbumani ramadoss visited the sabarimala ayyappa temple

    அவர் மேலும் கூறுகையில், பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு போகக் கூடாது என்று எதுவும் கிடையாது. போய்க்கொண்டு தான் உள்ளார்கள். ஆனால் 10 வயதில் இருந்து 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல கூடாது என்பது காலம், காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிற ஐதீகம். இதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிடுவது தவறு என்று கருத்து தெரிவித்தார்.

    anbumani ramadoss visited the sabarimala ayyappa temple

    மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை சென்ற பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணியுடன் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். சமீபத்தில் மத்திய அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு மாலை போட்டுச் சென்றிருந்தார். போன இடத்தில் எஸ்பியுடன் தகராறும் நடந்தது பரபரப்பானது. ஆனால் அன்புமணி எந்தவிதமான ஆர்ப்பாட்டமும், சச்சரவும் இல்லாமல் தரிசனம் செய்துள்ளார்.

    English summary
    Pmk Youth leader and parliament member anbumani ramadoss visited the sabari ayyappa temple
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X