இதுகூடவா தெரியாது ஒரு முதல்வருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைராபாத்: பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியுடன் ஆந்திர முதல்வர் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஆஷா. இவரை நாகேஷ்வரராவ் என்ற 45 வயது நபர் காஷ்மீரில் வைத்து கடந்த 50 நாட்களாக பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனயறிந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது 13 வயது சிறுமியான ஆஷாவை தான் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார் நாகேஷ்வர ராவ்.

உதவி வழங்கிய முதல்வர்

உதவி வழங்கிய முதல்வர்

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சிறுமி மைனர் என்பதால் அவரை மீட்டு ஆந்திராவில் உள்ள அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சொந்த மாநிலத்திற்கு திரும்பிய ஆஷாவை அந்த மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மகளிர் தலைவர் ராஜ குமாரி ஆகிய இருவரும் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிதியுதவி செய்துள்ளனர்.

சிறுமியுடன் போட்ட எடுத்த சிஎம்

சிறுமியுடன் போட்ட எடுத்த சிஎம்

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவி வழங்கியத போது எடுத்த போட்டோ முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்படி தவறு

சட்டப்படி தவறு

பலாத்காரத்திற்கு ஆளான ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிடுவது சட்டப்படி தவறாகும், அதிலும் இந்த வழக்கில் சம்பந்தமுடையவர் மைனர் சிறுமி ஆவார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தகவல்களை வெளியிடுவது அவரது எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியின் புகைப்படம், சொந்தப்பெயர் உள்ளிட்ட தகவல்களை வெளியிடக்கூடாது என சட்டம் உள்ளது.

இதுக்கூடவா தெரியாது?

இதுக்கூடவா தெரியாது?

இந்நிலையில் ஒரு மாநிலத்தை ஆளும் முதல்வர் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முதல்வருக்கு இதுகூடவா தெரியாது என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Andhra CM Chandrababu naidu posted photo which was taken with the Rape victim. This issue became controversy now. People are asking a CM didint know about even this.
Please Wait while comments are loading...