For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவில் நாளை 2 லட்சம் கெட்டிமேளம் கொட்டப் போகுது! நிரம்பி வழியும் மண்டபங்கள்

Google Oneindia Tamil News

நகரி: ஆந்திராவில் நாளை மட்டும் கிட்டதட்ட 2 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ள காரணத்தினால் மண்டபங்கள் நிரம்பி வழிவதுடன், புரோகிதர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் இந்த மாதம் பல்வேறு முகூர்த்த நாள் இருந்தபோதிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்கள் சிறந்த முகூர்த்த நாளாக கருதப்படுகிறது.

அதுவும் நாளை மாத சுத்த சதுர்த்தசி மற்றும் ரேவதி நட்சத்திரம் கூடி வருவதால் அதிர்ஷ்டகரமான முகூர்த்த நாளாக கருதப்படுகிறது.

சுபமுகூர்த்த நேரம்:

சுபமுகூர்த்த நேரம்:

நாளை அதிகாலை 12.33 மற்றும் 12.44, 3.00 மணி காலை 9 மணி, மாலை 5 மணி ஆகிய நேரங்கள் நல்ல நேரமாகும்.

2 லட்சம் கல்யாணம்:

2 லட்சம் கல்யாணம்:

இந்த நேரங்களில் திருமணம் நடத்த தெலுங்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். நாளை ஒரேநாளில் மட்டும் ஆந்திரா, தெலுங்கானாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான திருமணங்கள் நடத்த பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் மட்டும் 30:

திருப்பதியில் மட்டும் 30:

திருப்பதியில் மட்டும் நாளை 30 ஆயிரம் திருமணங்கள் நடக்கிறது. இதனால் திருமண மண்டபம், புரோகிதர்கள், அலங்கார வடிவமைப்பாளர், சமையல் கலைஞர்கள், இசை கலைஞர்கள், நாதஸ்வர கலைஞர்கள் ஆகியோருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மற்ற விஷேசங்கள்:

மற்ற விஷேசங்கள்:

திருமணம் மட்டுமல்லாமல் கிரகபிரவேசம், நிச்சயதார்த்தம், பூமிபூஜை ஆகியவையும் நாளை ஏராளமாக நடைபெறுகிறது. நிலம் மற்றும் வீடு பத்திர பதிவும் நாளை நடத்த தெலுங்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

களை கட்டிய

களை கட்டிய

ஒரு திருமணத்திற்காக ரூபாய் 7 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை செலவிடபடுவதாக திருமண காண்டிராக்டர் ராமராவ் தெரிவித்தார். ஆந்திர முழுக்க எங்கு பார்த்தாலும் இன்றைக்கே மங்கள மேள வாத்தியங்கள் முழங்க தொடங்கி களை கட்டி ஆரம்பித்து விட்டன.

English summary
Andhra state filled with lot of marriages tomorrow. Because tomorrow is a subamukurt for Andhra people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X