For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஐ லவ் ஹூட்ஹூட்': ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட ஆந்திர சட்டக்கல்லூரி மாணவர் கைது

By Siva
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: விசாகப்பட்டினத்தை புரட்டிப் போட்ட ஹூட்ஹூட் புயல் பற்றி ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த ஆந்திர சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

வங்கக் கடலில் நிலை கொண்ட ஹூட்ஹூட் புயல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், ஒரிஸா மாநிலம் கோபால்பூர் இடையே அண்மையில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது விசாகப்பட்டினத்தை சின்னாபின்னமாக்கிவிட்டது. புயலால் பாதிக்கப்பட்ட விசாகப்பட்டினம் பழையபடி ஆக குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

புயல் தாக்கியதில் 50 பேர் பலியாகினர், பலர் மாயமாகினர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புயல் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

Andhra: Police arrest law student for Facebook comment 'I love Hudhud'

அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

ஐ லவ் ஹூட்ஹூட். துரோகிகளை இயற்கை பழிவாங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

மாநிலத்தை தாக்கிய புயல் பற்றி கருத்து தெரிவித்த அந்த மாணவரை சிஐடி அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இதே குற்றத்திற்காக ஹைதராபாத்திலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

English summary
CID officials arrested a law college student in Guntur after he posted a comment in Facebook saying "I love Hudhud and that nature was taking revenge against betrayers."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X