"பள்ளிக்கு செல்ல சாலை அமைத்து தாருங்கள்".. ஆற்றில் நின்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்த பிஞ்சுகள்!
அமராவதி: ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டி இருப்பதால் தங்கள் கிராமத்தில் சாலை அமைத்துத் தரக் கோரி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பிஞ்சு மாணவர்கள் ஆற்றில் நின்றுகொண்டு கோரிக்கை விடுத்த சம்பவம் காண்போரின் கண்களை கலங்க வைப்பதாக இருந்தது.
பல ஆண்டுகளாக மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும் எந்தப் பயனும் இல்லாத நிலையில், தற்போது ஆற்றில் நின்று போராட்டம் நடத்தும் நிலைக்கு இந்த சிறு பிள்ளைகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் சூழலில், இனியாவது இவர்களுக்கு விடியல் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

போராட்டமா.. ச்சீ.. ச்சீ..
இந்தியாவில் இரண்டு விதமான மக்களை நாம் பார்க்க முடியும். போராட்டம் என்று கூறினாலே ஒருதரப்பு மக்களுக்கு மிளகாயை கடித்தது போல இருக்கும். போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் சமூக விரோத செயல்களாகவே இவர்கள் கருதுவர். "என்னது இது.., எதுக்கெடுத்தாலும் போராட்டமா", "போராட்டம் பண்ணி இப்போ என்ன சாதிச்சுற போறீங்க" போன்ற வார்த்தைகள் இவர்களிடம் இருந்து அடிக்கடி வெளிப்படும். ஆனால், அவர்களின் பின்னணியை பார்த்தால்தான் தெரியும். பிறந்தது முதல் எந்த கஷ்டமும் இல்லாத.., எது கேட்டாலும் உடனே கிடைத்துவிடும் குடும்பம் அல்லது சமூகப் பின்னணியில் இருந்து வந்திருப்பார்கள். அனைத்தும் எளிதாக கிடைத்துவிட்டதால் போராட்டம் என்றால் இவர்களுக்கு அலர்ஜியாகதான் இருக்கும். ஆனால், பிறப்பு முதல் இறப்பு வரை போராடினால்தான் அடிப்படை உரிமைகள் கூட கிடைக்கும் என்ற நிலைமையில் தான் இன்று நம் நாட்டில் சில சமூகத்தினர் இருக்கிறார்கள். இவர்கள் போராடவில்லை என்றால் அவர்களுக்கு உடுத்த துணி கூட கிடைக்காது. அதுபோன்ற ஒரு போராட்டம்தான் ஆந்திராவில் நடந்துள்ளது.

பழங்குடியின கிராமம்
ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் ஒரு மூலையில் அமைந்துள்ளது லிங்காபுரம் கிராமம். 500-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றன. சாதாரணமாக, நம் நாட்டில் கிராமம் என்றாலே வசதிகள் குறைவாகதான் இருக்கும். அதுவும் பழங்குடியின கிராமம் என்றால் கேட்கவா வேண்டும். இந்த கிராமத்தில் ஒரு சாலை கூட கிடையாது. குடிநீர் வசதியும், மின்சார வசதியும் கூட கிடையாது. இத்தனை சிரமங்களுக்கு மத்தியில்தான் இந்த கிராமத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

ஆறு உண்டு; பாலம் இல்லை
இந்த கிராமத்தின் குறுக்கே வரகா நதி என்ற பெரிய ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடந்து அக்கரைக்கு சென்றால்தான் அரசு அலுலவகங்கள், பள்ளி, கல்லூரிகள் இருக்கின்றன. எந்த அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும், படித்து முன்னேற வேண்டும் என்ற ஆசையில் இங்குள்ள பிள்ளைகள் பள்ளிசெல்கிறார்கள். ஆனால், இந்த வரகா நதியை கடந்துதான் இவர்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்ல வேண்டும். இதனால் மிகுந்த சிரமப்பட்டே இந்த மாணவர்கள் நாள்தோறும் பள்ளி சென்று வருகிறார்கள்.

ஆற்றில் இறங்கிய பிஞ்சுகள்..
ஆற்றை கடந்து செல்வததை தவிர்க்க அந்தப் பகுதியில் ஒரு சாலை அமைத்துத் தரக் கோரி கிராம மக்கள் பல தசாப்தங்களாக அதிகாரிகளிடம் மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர். ஆனால் ஒரு அரசியல்வாதி அல்லது அதிகாரியின் பார்வையோ இவர்கள் மேல் விழவில்லை. இதனிடையே, தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மாணவர்களால் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில், ஆரம்பப் பள்ளியில் படிக்கும் சின்னஞ்சிறு பிள்ளைகள், நேற்று இந்த ஆற்றில் நின்று போராட்டம் நடத்தினர். ஆற்றில் நின்றபடி கையெடுத்து கும்பிட்டவாரே நின்ற அந்தக் குழந்தைகள், "ஐயா, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களே, பள்ளிக்கு செல்ல ஒரு சாலை அமைத்து தாருங்கள்" என மழலை மொழியில் கோரிக்கை விடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி, காண்போரின் இதயத்தை கனக்கச் செய்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications