For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய சிற்பி அனிஷ் கபூரின் சிற்பம் ரூ.4.8 கோடிக்கு ஏலம்

Google Oneindia Tamil News

மும்பை: இந்தியாவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் ஒருவரின் சிற்பம் ஒன்று ஏலத்தில் ரூபாய் 4.8 கோடிக்கு விற்பனையாகி சாதனை புரிந்துள்ளது.

இந்தியாவின் மும்பை நகரில் பிறந்து லண்டனில் குடியேறிய சிற்பி அனிஷ் கபூரின் சிற்பங்கள் உலகம் முழுவது பிரபலமானவை.

இவரது புகழ் பெற்ற சிற்பங்கள் கிராண்ட் பாலாய்ஸ், பாரிஸ், சிகாகோவில் உள்ள மில்லினியம் பார்க் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறை:

இந்தியாவில் முதன்முறை:

இந்நிலையில் இவரது சிற்பங்களுக்கான ஏலம் உலகின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுள்ளது. ஆனால் இதுவரை இந்தியாவில் நடைபெறவில்லை.

மும்பையில் ஏலம்:

மும்பையில் ஏலம்:

இந்நிலையில் துருப்பிடிக்காத எஃகினால் அனிஷ் கபூர் வடிவமைத்த சிற்பம் ஒன்று முதல் முறையாக மும்பையில் நேற்று மாலை ஏலம் விடப்பட்டது. இந்த குழிவான எஃகு சிற்பத்தை 4.8 கோடி ரூபாய்க்கு ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.

50 கோடி ரூபாய் விற்பனை:

50 கோடி ரூபாய் விற்பனை:

இதன்கூடவே வி.எஸ்.கோயடண்டே, எஸ்.எச். ரசா, கே.எச்.ஆரா போன்ற கலைஞர்களின் படைப்புகளும் நேற்று ஏலம் விடப்பட்டன. மொத்தமாக 50 கோடி ரூபாய்க்கு கலைப்படைப்புகள் ஏலத்தில் எடுக்கப்பட்டன.

1971 ஆம் ஆண்டு ஓவியம்:

1971 ஆம் ஆண்டு ஓவியம்:

இந்த ஏலத்தில் அதிகப்பட்சமாக வி.எஸ்.கோயடண்டே 1971 ஆம் ஆண்டு வரைந்த எண்ணெய் ஓவியம் ஒன்று ரூபாய் 7.77 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

English summary
A large concave stainless steel sculpture by British-Indian sculptor Anish Kapoor sold for Rs. 4.8 crore ($7,05,882) at Saffronart’s Evening Sale of modern and contemporary Indian art here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X