For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சருடன் மோதல்.. கேரள விளையாட்டு கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் அஞ்சு ஜார்ஜ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: அமைச்சர் ஜெயராஜனுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, கேரள விளையாட்டு கவுன்சில் தலைவர் பதவியை தடகள முன்னாள் ஜாம்பவான் அஞ்சு ஜார்ஜ் ராஜினாமா செய்துள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் அஞ்சு ஜார்ஜ். பிரபல தடகள வீராங்கனையாக விளங்கிய இவர் கேரள விளையாட்டு கவுன்சில் தலைவராக பதவி வகித்து வந்தார்.

Anju Bobby George resigns as President of Kerala State Sports Council

இதனிடையே சமீபத்தில் கேரளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இடதுசாரி கூட்டணி ஆட்சிக்கு வந்தது. புதிதாக, பொறுப்பேற்ற கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயராஜன், விளையாட்டு கவுன்சில் நிர்வாகிகளிடம் மரியாதை குறைவாக பேசியதாக கூறப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் அஞ்சு ஜார்ஜ் முறையிட்டார். அப்படியும், எடுபடவில்லை. இதையடுத்து, அஞ்சு ஜார்ஜ் உட்பட 11 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

English summary
Former Indian athlete Anju Bobby George resigns as President of Kerala State Sports Council.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X