Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக். பெண்ணின் நிர்வாணப் படத்தைப் பார்த்து ஜொள்ளு விட்டு ராணுவ ரகசியங்களை விற்ற அதிகாரி!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் பெண் ஏஜென்ட் ஒருவர் பேஸ்புக் மூலம் விரித்த காதல் வலையில் சிக்கிய ராணுவ அதிகாரி ஒருவர் இந்திய ராணுவம் தொடர்பான பல முக்கியத் தகவல்களை அந்தப் பெண்ணுக்கு கொடுத்துள்ளார். தற்போது அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஹைதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அந்த அதிகாரியின் பெயர் பத்தான் குமார் போடர். இவர் செகந்திராபாத்தில் உள்ள ராணுவத்தின் இஎம்இ பிரிவில் நாயக் சுபேதராக இருந்து வருகிறார். இவரை தற்போது கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இவரை போலியான காதல் வலையில் வீ்ழ்த்தி ராணுவ ரகசியங்களைக் கவர்ந்த பாகிஸ்தான் பெண் யார் என்பது தெரியவில்லை. போன், சமூக வலைத்தளம், இமெயில் மூலம் இவர்கள் இருவரும் தொடர்பு வைத்திருந்தனர்.

முக்கியத் தகவல்கள்

முக்கியத் தகவல்கள்

முக்கிய ராணுவ தளங்கள் குறித்த தகவல்கள், பாதுகாப்புப் படையினர் எங்கெல்லாம் நிலை கொண்டுள்ளனர் என்பது உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை இந்த பத்தான் குமார் அந்தப் பாகிஸ்தான் பெண்ணிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பெரிய அளவில் தகவல் சேகரிப்பு

பெரிய அளவில் தகவல் சேகரிப்பு

இந்தப் பெண்ணுக்குத் தகவல் கொடுப்பதற்காக ராணுவத்தினர் பலருடன் பேசி தகவல்களைக் கறந்துள்ளார் பத்தான் குமார். மிகப் பெரிய அளவில் அவர் தகவல்களைச் சேகரித்துக் கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் செக்யூர்ட் லைப் என்ற மார்க்கெட்டிங் பிசினஸையும் இவர் நடத்தி வந்துள்ளார். இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்

பத்தான் குமார் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் முன்பு பணியாற்றியுள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புதான் இவர் செகந்திராபாத்துக்கு இடமாறுதலாகி சென்றார்.

இரவுப் பணி

இரவுப் பணி

இவர் தொடர்ந்து பல நாட்கள் இவராகவே இரவு நேரத்தில் கூடுதலாகப் பணியாற்றி வந்துள்ளார். இதனால் மேலதிகாரிகளுக்கு இவர் மீது சந்தேகம் வந்தது. கண்காணிக்க ஆரம்பித்தனர்.

காட்டிக் கொடுத்த கம்ப்யூட்டர்

காட்டிக் கொடுத்த கம்ப்யூட்டர்

இவரது கம்ப்யூட்டரை சோதனையிட்டு ஆய்வு செய்தபோதுதான் இவரது சில்மிஷங்கள் தெரிய வந்தன. அந்தப் பாகிஸ்தான் பெண் அனுஷ்கா அகர்வால் என்ற பெயரில் இவருடன் தொடர்பு வைத்திருந்தார். தனது நிர்வாணப் படங்களையும் இவருக்கு நிறைய அனுப்பி வைத்துள்ளார்.

ஜான்சி பெண்ணாக காட்டிக் கொண்டு

ஜான்சி பெண்ணாக காட்டிக் கொண்டு

தன்னை ஜான்சியில் வசிப்பதாக இவர் பத்தான்குமாரிடம் கூறி பழகியுள்ளார். இரவு பகலாக இருவரும் சாட் செய்துள்ளனர். நிர்வாணப் படங்களை அனுப்பி பத்தான் குமாருக்கு ஆசையைத் தூண்டி தனது வலையில் இவர் வீழ்த்தியுள்ளார். குளியல் காட்சிகளையும் இவர் அனுப்பி வைத்துள்ளார்.

சென்னை தகவல்கள்தான் அதிகம்

சென்னை தகவல்கள்தான் அதிகம்

பத்தான் குமார் கொடுத்த ராணுவ ரகசியங்களில் பெரும்பாலானவை சென்னை தொடர்பான ராணுவத் தகவல்கள்தான் அதிகம் உள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+