பாட்டியாலா மஹாராஜாவை விட பணக்காரராக உள்ள பாஜக வேட்பாளர் அருண் ஜேட்லி
அமிர்தசரஸ்: அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அருண் ஜேட்லி தன்னை எதிர்த்து போட்டியிடும் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரை விட பணக்காரராக உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பாஜக சார்பில் அருண் ஜேட்லி போட்டியிடுகிறார். அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பஞ்சாப் முதல்வரும், ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவருமான அமரிந்தர் சிங் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஜேட்லியின் சொத்து மதிப்பு அம்ரிந்தர் சிங்கை விட அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

சொத்து
ஜேட்லியின் பெயரில் ரூ. 75.7 கோடி அசையும், அசையா சொத்துக்களும், அவரது மனைவி சங்கீதாவின் பெயரில் ரூ.37.32 கோடி சொத்துக்களும் உள்ளது.

கார்கள்
ஜேட்லியிடம் ரூ.1.02 கோடி மதிப்புள்ள போர்ஷா கார், ரூ.78.89 லட்சம் மதிப்புள்ள மெர்சிடீஸ் பென்ஸ், ரூ.85.57 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபுள்யூ, ரூ.20.44 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா அக்கார்ட், ரூ. 23.28 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா பார்ச்சூனர் உள்ளது. இந்த கார்களின் மதிப்பு ரூ. 3.10 கோடி ஆகும். அதே சமயம் அமரிந்தர் சிங்கிடம் ஒரு கார் கூட இல்லை.

கையிருப்பு
ஜேட்லியிடம் ரூ. 1.35 கோடியும், அவரது மனைவியிடம் ரூ.7.5 லட்சமும் கையிருப்பு பணமாக உள்ளது.

வங்கி
ஜேட்லியின் பெயரில் வங்கியில் ரூ.18.01 கோடி உள்ளது. மேலும் பாண்டுகள் மற்றும் பி.பி.எஃப். ஆகியவற்றில் ரூ.2 கோடி மற்றும் ரூ.15 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

நகை
டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞரான ஜேட்லியிடம் ரூ.1.88 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள் உள்ளன. அவரது மனைவியிடம் ரூ. 23.44 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளன. அமரிந்தர் சிங்கிடம் 4 கிலோ தங்கமும், அவரது மனைவியும், எம்.பியுமான ப்ரனீத் கவுரிடம் ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வெள்ளி உள்ளது.

அசையா சொத்து
ஜேட்லி பெயரில் ஃபரிதாபாத்தில் ஒரு பிளாட்டும், குர்காவ்னில் உள்ள சைபர் பார்க்கில் வணிக சொத்தும், டெல்லி, குர்காவ்ன், காந்திநகரில் 5 குடியிருப்புகளும் உள்ளது. அவற்றின் மதிப்பு மட்டும் ரூ.75.70 கோடி ஆகும். அமரிந்தர் சிங்கிற்கு பாட்டியாலாவில் ரூ. 71.30 கோடி மதிப்புள்ள ராஜ மாளிகை உள்ளது.

வருமானம்
ஜேட்லியின் ஆண்டு வருமானம் ரூ.2.16 கோடி. அமரிந்தர் சிங்கின் ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சத்து 15 ஆயிரத்து 480 ஆகும்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications