For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடித்த ஆட்டோ டிரைவரை நேரில் சந்தித்த கெஜ்ரிவால்.. மன்னிப்பு கேட்டார் அடித்தவர்

Google Oneindia Tamil News

Arvind Kejriwal meets auto-driver who slapped him, gets an apology
டெல்லி: டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின்போது தன்னைத் தாக்கிய ஆட்டோ டிரைவரை நேரில் போயச் சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அவரிடம் ஆட்டோ டிரைவர் லாலி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

வட மேற்கு டெல்லி தொகுதிக்குட்பட்ட சுல்தாபுரில் பிரசாரம் செய்தபோது லாலி என்ற ஆட்டோ டிரைவர் திடீரென கெஜ்ரிவாலை அறைந்து விட்டார். 38 வயதான லாலியின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று அதிரடியாக லாலி வீட்டுக்குப் போனார். பின்னர் லாலிக்கு அவர் மாலை அணிவித்தார். அதன் பின்னர் அவரிடம் பேசினார். கன்னம், கண் வீங்கிய நிலையில் காணப்பட்ட கெஜ்ரிவாலிடம் லாலி மிகவும் உருக்கமாகப் பேசி மன்னிப்பு கோரினார்.

லாலி கெஜ்ரிவாலை அடித்ததுமே அவரை ஆம் ஆத்மி கட்சியினர் பிடித்து இழுத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் லாலியும் காயமடைந்தார்.

கெஜ்ரிவால் சந்திப்புக்குப் பின்னர் லாலி செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் கெஜ்ரிவாலிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். நான் செய்தது பெரிய தவறு என்பதை உணர்கிறேன் என்றார்.

English summary
Arvind Kejriwal, the chief of the Aam Aadmi Party or AAP, today met the man who slapped him while he was campaigning in Delhi on Tuesday. Lali, an auto-rickshaw driver, attacked Mr Kejriwal when he was campaigning in Sultanpuri in northwest Delhi for the national election. Today, the 38-year-old said, "I apologise to Mr Kejriwal. I committed a huge mistake by attacking him."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X