For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அஸ்ஸாம் சட்டவிரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் மேலும் ஒருவர் மரணம்- உயிரிழப்பு 29 ஆக அதிகரிப்பு

Google Oneindia Tamil News

குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டவிரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து சட்டவிரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

அஸ்ஸாமில் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்களைத் தடுத்து வைக்க 6 தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோல்பாரா மாவட்டத்தில் தற்போது 7-வது தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது.

Assam detention camp death toll rises to 29

இத்தடுப்பு முகாம்களில் 2017-ம் ஆண்டில் இருந்து 1000-க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்க சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர் 28 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்கிறது அஸ்ஸாமின் வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயம்.

அஸ்ஸாம் மாநில அரசும் உயிரிழப்புகளை உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் குவஹாத்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒரு தடுப்பு முகாம் கைதி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பதாக பகீர் புகார்பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பதாக பகீர் புகார்

கடந்த 10 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தடுப்பு முகாம்களில் பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

English summary
A man who lodged in Assam's detention camp died on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X