அஸ்ஸாமில் 2 மினி வேன்கள் மீது லாரி மோதி விபத்து: 13 குழந்தைகள் உள்பட 28 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

அஸ்ஸாம் மாநிலம் பார்பேட்டா மாவட்டத்தில் உள்ள தொஹொலபராவில் லாரி ஒன்று இன்று அதிகாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரி 2 மினி வேன்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் 2 மினி வேன்கள் நசுங்கின. அவற்றில் இருந்த 13 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 28 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மினி வேன்களில் செங்கல் சூளையில் வேலை பார்ப்பவர்கள் பயணம் செய்தனர்.
இந்த விபத்தில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications