வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள வாஜ்பாயை சந்தித்த மோடி

    டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எய்மஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.

    93 வயதாகும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வில் இருந்தார்.

    Atal Bihari Vajpayee health condition critical, on life support

    உடல்நிலை பாதிப்பு அதிகரித்ததால், ஜூலை, 11ம் தேதி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய், சிகிச்சைக்காக, சேர்க்கப்பட்டார். இதனிடையே, வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் வாஜ்பாய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Atal Bihari Vajpayee health condition critical, on life support

    இதையடுத்து, வாஜ்பாயின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களிடம், பிரதமர் மோடி நேரில் விசாரித்தார். சுமார் 50 நிமிடங்கள் அவர் மருத்துவமனையில் இருந்தார். துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவும் வாஜ்பாய் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும், வாஜ்பாய் உடல் நலம் விசாரித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+