ஊரடங்கு உத்தரவு.. காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்; அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
டெல்லி: காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு தற்போது சுற்றுலா செல்ல வேண்டாம் என அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த கமாண்டர் பர்கான் வானி உள்ளிட்ட 3 பேர் கடந்த 8ம் தேதியன்று ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பெரிய அளவில் வன்முறை வெடித்தது. 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறை சம்பவங்களால் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு தற்போது சுற்றுலா செல்ல வேண்டாம் என வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், அங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. கிட்டதட்ட அடுத்த 2 மாதங்களுக்கு சுற்றுலாவுக்காக செய்யப்பட்டிருந்த புக்கிங்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 2014-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்தே காஷ்மீர் சுற்றுலா நலிவடைந்துவிட்டது. இது அங்குள்ள டாக்ஸி ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வியாபாரிகள் மட்டுமின்றி ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளையும் கடுமையாக பாதித்துள்ளது.
காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் மற்றும் வன்முறை அதிகரித்து வருவதால் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மற்றும் காமன்வெல்த் அலுவலகம் தன் நாட்டு குடிமக்கள் காஷ்மீரின் பகல்காம், குல்மார்க், சோனாமார்க் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இதேபோல், ஸ்ரீநகருக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தன் நாட்டு குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications