ஆபாசப் படங்களுக்கு என் கணவன் அடிமை ஆகிவிட்டார்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பெண்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆபாசப் படங்களுக்கு என் கணவன் அடிமை ஆகிவிட்டார்.. வழக்குத் தொடுத்த பெண் | ONEINDIA TAMIL

  டெல்லி: ஆபாசப் படங்களுக்கு தன் கணவன் அடிமை ஆகிவிட்டதாகப் பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறார். அந்தப் பெண் ஆபாசப் படங்களை தடை செய்ய வேண்டும் என்றுக் கோரிக்கை வைத்துள்ளார்.

  இதே போல் உச்ச நீதிமன்றத்தில் 2013ல் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கு கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்கறிஞரால் தொடுக்கப்பட்டது.

  தற்போது அதில் இவரும் மனுதாரராகச் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  கிடைக்கிறது

  கிடைக்கிறது

  அவர் தனது மனுவில் ''இந்தியாவில் மிகவும் எளிதாக ஆபாசப் படங்கள் கிடைக்கிறது. இணையத்தில் ஆபாசப் படங்கள் கொட்டிக் கிடக்கிறது. இது மக்களின் மனதை மிகவும் மோசமாகப் பாதிக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

  மாறினார்

  மாறினார்

  மேலும் ''இந்தப் படங்கள் ஆண்களை பாலியல் குற்றம் செய்ய வைக்கிறது. அவர்களின் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனையை உருவாக்குகிறது. பாலியல் ரீதியாக ஆண்களை இந்தப் படங்கள் சிதைக்கிறது. என் கணவனும் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்'' என்றுள்ளார்.

  விவாகரத்து கேட்டார்

  விவாகரத்து கேட்டார்

  அதேபோல் ''இதனால் எனக்கும் என் கணவனுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. அவர் என்னிடம் இருந்து விவாகரத்து கூட கேட்கிறார். ஆபாசப் படங்களால் எங்கள் வாழ்க்கை மிகவும் மோசமாகிவிட்டது'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

  தடை

  தடை

  முக்கியமாக ''ஆபாசப் படங்களில் இருந்து ஆண்களைக் காப்பற்ற வேண்டும். பல பெண்களை இதில் இருந்து காக்க வேண்டும். இதனால் இந்தியாவில் ஆபாசப் படங்களை தடை செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Woman filed complaint on Supreme Court asks to ban porn film. She filed the case because her husband got addicted to it.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற