காதலர் தினத்தில் கலக்கல்.. பயணிகளுக்கு பெங்களூர் மெட்ரோ ரயில் கொடுக்கப்போகும் அசத்தல் பரிசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காதலர் தினத்தில் பெங்களூரு மெட்ரோ மக்களுக்கு அளிக்கும் சிறப்பு பரிசு- வீடியோ

  பெங்களூர்: காதலர் தின பரிசாக பெங்களூர் மெட்ரோ ரயில் கூடுதலாக 3 பெட்டிகளை இணைத்து இயக்க உள்ளது.

  பெங்களூர் மெட்ரோ ரயில் சேவை, 'நம்ம மெட்ரோ' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 3 கோச்கள் கொண்ட ரயில்களாக இவை இயக்கப்படுகின்றன. சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை ஒப்பிட்டால் பெங்களூர் மெட்ரோ ரயில் கட்டணம் சற்று குறைவாகும்.

  அதேநேரம், பெங்களூரில் இயங்கும், நகர ஏசி பஸ்களை விட மெட்ரோவில் கட்டணம் குறைவுதான். எனவே மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

  கூடுதல் கோச்கள்

  கூடுதல் கோச்கள்

  கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் கோச்சுகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளால் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 6 கோச்கள் கொண்ட ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. கூடுதல் கோச்கள் இணைக்கப்பட்டு, சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.

  இந்த ரூட்டில்

  இந்த ரூட்டில்

  இதையடுத்து பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் முதல், பெங்களூரின் ஒரு வழித்தடத்தில் கூடுதல் பெட்டிகளுடன் மெட்ரோ ரயில் இயக்கப்படுகின்றன. கெம்பேகவுடா ஸ்டேஷன் (மெஜஸ்டிக்) முதல் எம்ஜிரோடு, இந்திராநகர் வழியில், பையப்பனஹள்ளி வரையிலான பர்ப்பிள் ரூட்டில் இந்த கூடுதல் பெட்டிகள் கொண்ட ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

  அமைச்சர் அறிவிப்பு

  இதுகுறித்து பெங்களூர் நகர வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் டிவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனவே இதை காதலர் தின பரிசு என்றே பெங்களூர் நகர மக்கள் அழைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த 6 கோச்சுகளில் ஒன்று பெண்களுக்காக மட்டுமே என்பதும் இதில் சிறப்பாகும்.

  காதலர்களே கவனிக்கவும்

  காதலர்களே கவனிக்கவும்

  படிப்படியாக பர்ப்பிள் ரூட்டில் அனைத்து ரயில்களிலும் கூடுதலாக 6 கோச்சுகள் இணைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல படிப்படியாக பிற வழித்தடங்களிலும் கோச்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, பயணிகள் நெரிசல் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏதோ காதலர் தினத்தன்று மட்டுமே, நமக்காக, இயக்கப்படும் கூடுதல் கோச்கள் என நினைத்து காதலர்கள் 'களமிறங்கிவிட' வேண்டாம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Come February 14 and Namma Metro is all set to give Bengalureans their Valentine's Day gift. The first train with six coaches, as against the current three-coach trains, will be launched on Valentine's Day on the Purple Line of Namma Metro.Bengaluru In-charge minister K J George took to Twitter to make the announcement. One train with six-coaches, effectively doubling the current carrying capacity of commuters, will run on the Purple Line to ease congestion from Kempegowda Station (Majestic) to Baiyappanahalli station. The first coach in this train will be reserved for women commuters- a first for the Bengaluru metro.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற