For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரு சர்ச் சாலை குண்டு வெடிப்பு: பிகாரில் ஒருவர் கைது!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரு சர்ச் சாலையில் கடந்த 28ம்தேதி நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பீகாரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ விசாரணை நடத்த உள்ளது.

பெங்களூரு எம்ஜி ரோடு சர்ச் சாலை பகுதியில் டிசம்பர் 28ம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் சென்னையை சேர்ந்த பவானி தேவி என்ற 38 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.

Bengaluru blast, One held in Bihar

இந்த சம்பவத்தில் சிமி அல்லது அல்-உம்மா தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பீகாரில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் நடமாடுவதை என்.ஐ.ஏ கண்டுபிடித்தது. அவரை கைது செய்யுமாறு அம்மாநில போலீசாருக்கு புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் பீகார் போலீசார் அந்த நபரை இன்று கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சந்தேகத்தின்பேரில் இந்த கைது நடைபெற்றுள்ள நிலையில் அதை ஊர்ஜிதம் செய்த பிறகு பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட என்.ஐ.ஏ திட்டமிட்டுள்ளது.

English summary
The National Investigating Agency will question one person arrested by the Bihar police on the suspicion that he could have had a role to play in the Bengaluru Church Street blasts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X