டெல்லியில் ராகுல் பிரம்மாண்ட பேரணி.. ஆம் ஆத்மி, இடதுசாரிகளும் பங்கேற்பு.. கண்டன ஆர்ப்பாட்டம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் பேரணி நடக்கிறது.
Recommended Video

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் பேரணி நடக்கிறது. தற்போது இவர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தியா முழுக்க பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.. இதனால் பல மாநிலங்களில் பேருந்துகள் இயங்கவில்லை.
இந்த போராட்டம் காரணமாக பல மாநிலங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா முழுக்க முழு அடைப்பு போரட்டம் நடத்தப்படுகிறது.
|
எங்கு எல்லாம் நடக்கிறது
பீகார், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா, டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும், பாஜக ஆளாத மாநிலங்களிலும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.
|
ஆர்ப்பாட்டம் நடக்கிறது
இந்தியா முழுக்க இதனால் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட உள்ளது. தமிழகத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இப்போதே வட மாநிலங்களில் ரயில் மறியல் ஆர்ப்பாட்டமும், சாலை மறியல் போராட்டமும் தொடங்கிவிட்டது.

பெரிய அளவில் மறியல்
தமிழகத்தில் போராட்டம் அமைதியாக நடந்தாலும் வடமாநிலங்களில் போராட்டம் பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது. பீகாரில் சிறிய சிறிய வன்முறைகள் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் சாலையில் டயர்களை போட்டு கொளுத்தி வருகிறார்கள். அதேபோல் பாஜக தலைவர்களின் உருவ பொம்மையும் ஆங்காங்கே எரிக்கப்படுகிறது.

டெல்லி ஆர்ப்பாட்டம்
தற்போது டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் பேரணி நடக்கிறது. ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை ஆயிரக்கணக்கானோர் நடைபயணம் செய்தனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பேரணியில் முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. இந்தியா முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்துள்ளது.

பிரம்மாண்ட பேரணி
டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடந்து வருகிறது.சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.ஆம் ஆத்மீ கட்சியினரும் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் தொடங்கி ஜந்தர் மந்தர் வரை பேரணி நீண்டது.
|
போராட்டம்
தற்போது ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடக்கிறது. இடதுசாரி அமைப்புகளும் பேரணியில் கலந்து கொண்டுள்ளது. அங்கு பெட்ரோல், டீசல் விலைக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications