கை கொடுக்காத ஜோடோ யாத்திரை.. 2 மாநிலங்களிலும் தோற்கிறது காங்கிரஸ்? கார்கேவிற்கும் பின்னடைவு
சிம்லா: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனால் குஜராத் மற்றும் இமாசல பிரதேச தேர்தல் வெற்றிக்கு ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை உதவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருமாநில தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகளால் காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சும் என தெரிகிறது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இரண்டு மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேசத்திற்கு கடந்த நவம்பர் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அதேபோல், குஜராத்தில் கடந்த 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக 89 மற்றும் 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. இந்த இரு மாநிலங்களிலுமே பாஜக ஆட்சிதான் உள்ளது. இதனால், இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

எளிதில் பாஜக வெற்றி
இதன்படி, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜாரத்தில் பாஜக எந்த சிக்கலும் இன்றி ஆட்சியை தக்க வைத்துவிடும் என்பதை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. குஜராத்தில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துவிடலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் இதுவரை இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் இந்த எண்ணிக்கையை பாஜக சர்வ சாதாரணமாக கடந்து விடும் என்றே சொல்கின்றன.

7-வது முறையாக ஆட்சி
இதனால், குஜராத்தில் எளிதாக அந்தக் கட்சி ஆட்சி அமைத்து விடும் என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த ஏமாற்றம் தான் கிடைக்கும் போல் தெரிகிறது. அதேவேளையில் ஆம் ஆத்மி குஜராத்தில் தனது தடத்தை பதிவு செய்துவிடும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுவதும் முக்கியமாக பார்க்க வேண்டியது. பாஜக குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தொடர்ந்து பிடித்து சாதனை பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கடும் போட்டி அளிக்கும் என்றாலும் பாஜக ஆட்சி அமையவே வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு கடும் ஏமாற்றம்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு கடும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாகவே அமைந்து இருக்கிறது. ஏனெனில், காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருந்த நிலையில், கட்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக கட்சித்தலைமை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன் கார்கே வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை
காந்தி குடும்பத்தை சாராத தலைவராக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு கார்கே வெற்றி பெற்றார். அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி முதல் தேர்தல் இதுவாகும். இதுஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடுமுழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ளார். சுமார் 3 மாதங்களுக்கு மேலாக அவரது யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராகுல் காந்திக்கு வழி நெடுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சும்
பாரத் ஜோடோ யாத்திரை குஜராத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாகவே பிந்தைய கருத்துக்கணிப்புகள் அமைந்துள்ளன. தலைமை மாற்றம், பாரத் ஜோடோ யாத்திரை என அடுத்தடுத்த அதிரடிகளுக்கும் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications