For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகார்: 3வது கட்ட சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளருக்கு ரூ.928 கோடி சொத்து!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநில சட்டசபை தேர்தலில் 3வது கட்ட தேர்லுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. 50 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் 808 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 928 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள வேட்பாளரும், ஒரு பைசா கூட சொத்து இல்லாத ஏழை வேட்பாளரும் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீகார் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், ஆளும் ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணியும் தீவிரம்காட்டி வருகின்றன. 243 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சட்டசபையில், முதல் கட்டமாக 49 தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக கடந்த 32 தொகுதிகளுக்கு 16ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

3வது கட்டமாக வைஷாலி, சரன், பாட்னா உள்ளிட்ட 50 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மனுதாக்கல் அக்டோபர் 1ம்தேதி தொடங்கியது. இதில் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களுடன் சொத்து மதிப்புகளையும் அபிடவுட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ரமேஷ் சர்மா என்ற சுயேட்சை வேட்பாளருக்கு ரூ.9,2853,54,696 சொத்து இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் யுகேஸ்வர் மஞ்சி என்ற வேட்பாளருக்கு எந்த வித வருமானமும் இல்லை, சொத்துக்களும் இல்லை பூஜ்யம் சொத்து மதிப்புதான் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.40 கோடி என்று தெரியவந்துள்ளது.

மிகப்பெரிய கோடீஸ்வரர்

மிகப்பெரிய கோடீஸ்வரர்

பிக்ரம் தொகுதியில் போட்டியிடும் ரமேஷ் சர்மா என்ற சுயேட்சை வேட்பாளருக்கு 9,2853,54,696 சொத்து உள்ளது. அதே போல பார் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் குமார் இந்திரதேவ் என்ற வேட்பாளருக்கு, அசையும் சொத்து மதிப்பு ரூ.22,48,600. அசையா சொத்து மதிப்பு 1,1102,00000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2000 வருமானம்

ரூ.2000 வருமானம்

அதே போல நாலந்தா தொகுதியில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் மோகன்குமார் தனது அசையும் சொத்து மதிப்பு ரூ.2000 என்று தெரிவித்துள்ளார். அசையா சொத்து இல்லை என்று கூறியுள்ளார். அதேபோல உமேஸ்வர் மிஷ்ரா என்ற வேட்பாளருக்கும் ரூ. 2000 மட்டுமே வருமானம் உள்ளது.

ஏழை வேட்பாளர்

ஏழை வேட்பாளர்

3 வது கட்ட தேர்தலில் போட்டியிடும் 808 வேட்பாளர்களில் இரண்டு வேட்பாளர்கள் ஏழை வேட்பாளர்கள் என்ற தெரியவந்துள்ளது. இதில் அஸ்தவான் தொகுதியில் போட்டியிடும் யுகேஸ்வர் மஞ்சி என்ற சுயேட்சை வேட்பாளரின் சொத்து மதிப்பு பூஜ்யம் ஆகும். பத்வா தொகுதியில் போட்டியிடும் குமார் ராஜீவ் என்ற சுயேட்டை வேட்பாளரின் சொத்து மதிப்பு பூஜ்யம் ஆகும்.

பாஜகவில் கோடீஸ்வரர்கள்

பாஜகவில் கோடீஸ்வரர்கள்

கட்சியின் அடிப்படையில் பார்த்தால் பாஜகவில் 34 வேட்பாளர்களில் 26 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள். பகுஜன் சமாஜ் பார்ட்டி யில் 47 வேட்பாளர்களில் 13 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தில் வேட்புமனு தாக்கல் செய்த 18 வேட்பாளர்களில் 13 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், காங்கிரஸ் கட்சியில் உள்ள 7 வேட்பாளர்களில் 5 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

சுயேட்சை வேட்பாளர்கள்

சுயேட்சை வேட்பாளர்கள்

ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளர்களில் 25 வேட்பாளர்களில் 20 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். அதேபோல, சமாஜ்பார்ட்டியில், 31 வேட்பாளர்களில் 16 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். 276 சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு கோடி ரூபாய் சொர்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வருமானவரி கணக்கு தாக்கல்

வருமானவரி கணக்கு தாக்கல்

மூன்றவது கட்ட தேர்தலில் போட்டியிடும் 276 வேட்பாளர்கள் பான் கணக்கு எண் விபரத்தை தெரிவிக்கவில்லை. அதேபோல 808 வேட்பாளர்களில் 458 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.

English summary
The richest candidates contesting the third phase of the Bihar assembly elections 2015 is worth Rs 928 crore where as the poorest have declared zero assets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X