புல்வாமா தாக்குதல், பிபின் ராவத் மரணம்.. எல்லாமே தற்செயலா? காங்கிரஸ் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
ஜெய்ப்பூர்: தேர்தல் வரும்போதெல்லாம் ஏதாவது அசம்பாவிதங்களும், உயிரிழப்புகளும் நடைபெறுவதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திர சிங் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம்சாட்டி இருக்கிறார்.
மேலும் 2019 மக்களவைத் தேர்தலின்போது புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததையும் இணைத்து காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திர சிங் பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2022ல் உ.பி. தேர்தல்
இந்தியா முழுவதும் 7 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி மக்களவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலம் உத்தரப் பிரதேசம் என்பதால் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சியை தக்கவைக்க பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அலிகரில் 2 நாட்களுக்கு முன்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு துறைக்கான கருவிகளை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தார். ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமையுடன் பேசினார். பின்னர் ஜாட் அரசர் மகேந்திரா பிரதாப் சிங் பெயரில் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லையும் நாட்டினார் பிரதமர் மோடி.

பிபின்ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் பலி
2019ம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் லெத்திபோரா மற்றும் அவந்திபோரா பகுதிகளுக்கு இடையே ராணுவ வீரர்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றது. சுமார் 350 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் இருந்த கார் ராணுவ வீரர்கள் மீது மோதியதில் 76வது பட்டாலியனை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். டிசம்பர் 8ம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய ராணுவ குரூப் கேப்டன் வருண்சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து சந்தேகம்
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திர சிங் ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். அதில், 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற புல்வாமா தாக்குதல் குறித்தும், 2022 உத்தர பிரதேச தேர்தலுக்கு முன்னர் நடைபெற்றுள்ள ஹெலிகாப்டர் விபத்து குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.
அதாவது ஒவ்வொரு தேர்தல் கருத்துக்கணிப்புக்கு முன்னரும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவது சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக தெரிவித்தார். தேர்தலுக்கு முன்னர் பிபின் ராவத் மரணம் அடைந்தது தற்செயலானதா என்று கேள்வி எழுப்பிய அவர் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதும் தீவிரவாதிகளால் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என பேசி உள்ளார்.
Recommended Video

யூகங்கள் வேண்டாம் - ஐஏஎப்
கடந்த வாரம் விமானப் படை வெளியிட்டிருந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக யூகங்கள் அடிப்படையில் யாரும் கருத்து தெரிவிக்கவேண்டாம். விபத்து நடந்தது ஒரு சதி என்பதுபோல பலரும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். அதை தவிர்க்குமாறும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிக்க IAF முப்படை விசாரணை நீதிமன்றம் டிசம்பர் 21ம் தேதி அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவுகள் விரைவாக வெளிவரும் என்பதால் அதுவரை, இறந்தவரின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications