ரூ.1,034 கோடி வருமானம்.. இந்தியாவிலேயே பாஜகதான் பணக்கார கட்சி.. இதுதான் அந்த வளர்ச்சியோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவிலேயே பாஜகதான் பணக்கார கட்சி என்று டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஒருவருடம் மட்டும் பாஜகவிற்கு ரூ.1,034 கோடி வருமானம் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த வருமான விபரங்களின் படி இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் பாஜக கட்சி பெரிய அளவில் வளர்ந்து இருப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இந்த ஆய்வின் படி கடந்த ஒருவருடம் மட்டும் பாஜகவிற்கு ரூ.1,034 கோடி வருமானம் வந்துள்ளது. இந்தியாவிலேயே பாஜகதான் அதிக வருமானம் ஈட்டிய கட்சி ஆகும். பாஜகவிற்கு அடுத்து காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடம் வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி ரூ.225.36 வருமானத்துடன் இந்த இடம் பிடித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP has declared as the richest party in India with Rs 1,034 crore income. Congress comes to the second place with a declared income of Rs. 225.36.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற