பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவையில் வானதி, தி.நகரில் ஹெச்.ராஜா போட்டி
டெல்லி: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 54 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெயிட்டது பாஜக. ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோரின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
டெல்லியில் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 54 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை மத்திய அமைச்சரும் தேர்தல் குழு செயலாளருமான ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

அதில், துணை தலைவர் வானதி சீனிவாசன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் தொகுதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை தியாகராய நகர் தொகுதியில் ஹெச். ராஜா போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
54 தொகுதிகளுக்கான வேட்பாளர் விவரம் வருமாறு:
1. கும்மிடிப்பூண்டி- எம்.பாஸ்கர்
2. திருத்தணி- எம்.சக்கரவர்த்தி
3. ஆவடி- ஜே.லோகநாதன்
4. பெரம்பூர்- பிரகாஷ்
5. சைதாப்பேட்டை- காளிதாஸ்
6. தியாகராயநகர்- எச்.ராஜா
7. காஞ்சீபுரம்- டி. வாசன்
8. ஆம்பூர்- வெங்கடேசன்
9. ஓசூர்- ஜி.பாலகிருஷ்ணன்
10. தளி- பி.ராமச்சந்திரன்
11. பென்னாகரம்- கே.பி.கந்தசாமி
12. செய்யாறு- பி.பாஸ்கரன்
13. செஞ்சி- எம்.எஸ்.ராஜேந்திரன்
14. விழுப்புரம்-ஆர். ஜெயக்குமார்
15. கெங்கவல்லி-சிவகாமி பரமசிவம்
16. சேலம் தெற்கு-அண்ணாதுரை
17. திருச்செங்கோடு-நாகராஜன்
18. ஈரோடு கிழக்கு-பி.ராஜேஷ்குமார்
19. ஈரோடு மேற்கு-என்.பி.பழனிச்சாமி
20. காங்கேயம்- உஷாதேவி
21. பவானி- சித்திவிநாயகம்
22. பவானிசாகர்(தனி)-என்.ஆர்.பழனிச்சாமி
23. உதகமண்டலம்-ஜெ.ராமன்
24. திருப்பூர் வடக்கு-சின்னச்சாமி
25. திருப்பூர் தெற்கு-பாயிண்ட் மணி
26. சூலூர்-மோகன் மந்திராசலம்
27. கோவை தெற்கு-வானதி சீனிவாசன்
28. சிங்காநல்லூர்-சி.ஆர்.நந்தகுமார்
29. ஒட்டன்சத்திரம்-எஸ்.கே.பழனிச்சாமி
30. கரூர்- கே.சிவசாமி
31. திருச்சி கிழக்கு-
32. நாகப்பட்டினம்-நேதாஜி
33. வேதாரண்யம் -வேதரத்தினம்
34. கும்பகோணம் -அண்ணாமலை
35. பட்டுக்கோட்டை -கருப்பு முருகானந்தம்
36. பேராவூரணி -ஆர்.இளங்கோ
37. மானாமதுரை (தனி) -எம்.ராஜேந்திரன்
38. மதுரை கிழக்கு -எம்.சுசீந்திரன்
39. சோழவந்தான் (தனி) -எஸ்.பழனிவேல்சாமி
40. திருமங்கலம் -வி.ஆர்.ராமமூர்த்தி
41. போடிநாயக்கனூர் -வி.வெங்கடேசுவரன்
42. சாத்தூர் -பி.ஞானபண்டிதன்
43. விருதுநகர்- சி.காமாட்சி.
44. பரமக்குடி (தனி)-பொன்.பாலகணபதி.
45. விளாத்திக்குளம்-பி.ராமமூர்த்தி.
46. தூத்துக்குடி-எம்.ஆர்.கனகராஜ்.
47. ஒட்டப்பிடாரம் (தனி)-ஏ.சந்தனகுமார்.
48. கடையநல்லூர்-கதிர்வேல்
49. கன்னியாகுமரி-எம்.மீனாதேவ்.
50. நாகர்கோவில்-எம்.ஆர்.காந்தி.
51. குளச்சல்- பி.ரமேஷ்.
52. பத்மநாபபுரம்-எஸ்.ஷீபா பிரசாத்.
53. விளவங்கோடு-சி.தர்மராஜ்.
54. கிள்ளியூர்-பொன்.விஜயராகவன்.
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications