மக்களை மதிப்பதேயில்லை.. பணத்தால் எம்எல்ஏக்களை இழுப்பதுதான் பாஜக வேலை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
இம்பாலில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசி ஓட்டு சேகரித்தார். பிரியங்கா பேசியதாவது:
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இதில் உத்தரகாண்ட், கோவாவில் பிப்.,14ல் தேர்தல்கள் முடிவடைந்தன. உத்தரபிரதேசத்தில் 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற வேண்டியுள்ளது. பஞ்சாப்பில் பிப்.,20ல் தேர்தல் நடைபெற உள்ளது.

மணிப்பூர் நிலவரம்
மணிப்பூரில் பிப்.,28ல் முதற்கட்ட தேர்தலும், மார்ச் 5ல் இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. நாங்தோம்பம் பீரன் சிங் முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இழந்த ஆட்சியை மீட்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இம்பாலில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி ஓட்டு சேகரித்தார். பிரியங்கா பேசியதாவது:

பஸ்களில் இலவச பயணம்
மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். சுற்றுலா திட்டங்கள் மேம்படுத்தப்படும். பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்படும். காங்கிரஸ் அரசை தேர்வு செய்தால் உங்களுக்கான திட்டங்கள் நிறைந்த வித்தியாசமான அரசு கிடைக்கும்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் மருத்துவமனைகள் அமைக்கப்படும். பெண்களுக்கு இலவச பஸ் பயணம் அளிக்கப்படும்.

எம்எல்ஏக்களை இழுக்கும் பாஜக
மணிப்பூருக்கான கடந்த தேர்தலில் காங்கிரஸ் தான் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியாக இருந்தது. மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் பாஜக மக்கள் தீர்ப்பை மதிக்கவில்லை. பிற கட்சி எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சி அமைத்தது.
எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து கட்சி, கூட்டணிக்குள் இழுக்கும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்'' என்றார்.

கடந்த முறை நடந்தது என்ன
மணிப்பூரில் 2017 ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 21 இடங்களில் வென்றது. ஆட்சி அமைக்க 31 எம்எல்ஏக்கள் வேண்டும். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை உருவானது. இதையடுத்து சிறிய கட்சிகளான என்பிஎப், என்பிபி உள்ளிட்ட சிறிய கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications