பெண்களை மோடி அவமதிப்பதாக வீடியோ.. காங்கிரஸை அந்த மாதிரி கம்பெனி என பாஜக தாக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த வாரம் பிரதமர் மோடி ராஜ்ய சபாவில் பேசினார். காங்கிரஸ் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர் பேசினார்.

மோடி பேசிக்கொண்டு இருக்கும் போதே காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினர் ரேணுகா சவுத்திரி சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். சபாநாயகர் வெங்கைய்யா நாயுடு அமைதியாக இருக்கச் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

இதற்கு ரேணுகா சவுத்திரியை அவமதிக்கும் வகையில் மோடி பதில் அளித்தார். அதற்கு பதிலடியாக தற்போது காங்கிரஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறது.

என்ன பிரச்சனை

ரேணுகா சிரிப்பதை பார்த்த மோடி ''அவர் நன்றாகச் சிரிக்கட்டும். அவரை யாரும் தடுக்காதீர்கள். ராமாயணத்தில் சிலர் இப்படித்தான் சிரித்தார்கள். அதற்குப் பின் இப்போதுதான் இப்படி ஒரு சிரிப்பை பார்த்து இருக்கிறேன்'' என்று கிண்டலாக குறிப்பிட்டார். அதில் ரேணுகாவை சூர்பனகையுடன் ஒப்பிட்டு மோடி குறிப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பதிலடி

பதிலடி

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் தற்போது காங்கிரஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறது. இதுவரை மோடி எத்தனைப் பெண் தலைவர்களை அவமதித்து இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளனர். சுனந்தா புஷ்கர் தொடங்கி ஷேக் ஹசினா வரை அவர் எப்படி அவமானப்படுத்திப் பேசினார் என்றுள்ளது.

எல்லாத் தலைவர்கள்

அதுமட்டும் இல்லாமல் மற்ற பாஜக தலைவர்கள் குறித்தும் அந்த வீடியோவில் உள்ளது. முக்கியமாக அருண் ஜேட்லி, மோகன் பாகவத் ஆகியோர் பெண்களை குறித்துப் பேசியது இந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.

பாஜக பதில்

பாஜக பதில்

இதற்கு பாஜக கட்சி உறுப்பினர்கள் பதில் அளித்துள்ளனர். பாஜக செய்தி தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் ''ராகுல் காந்தி எப்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனாரோ அப்போதே அந்தக் கட்சி நாசமாகிவிட்டது. மக்கள் பிரச்சனை பற்றிப் பேசாமல் எதோ ஆபாச வீடியோ தயாரிக்கும் கம்பெனி போல செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress MP Renuka Chowdhury mocks Modi with her hilarious laugh in Rajya Sabha yesterday. Renuka says that, she smiled at him because, he talked so funny. Renuka Chowdhury becomes viral after Modi's Ramayan comment. Now Congress replies Modi with a video. BJP says Congress is B-Grade Video company after its twitter video.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற