For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி செல்வாக்குக்கு சரமாரி அடி.. உ.பியில் கூட குண்டக்க மண்டக்க சரிவு!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவின் செல்வாக்கு கடும் சரிவு...ராகுல் பிரதமர் ஆக வாய்ப்பு- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடியின் செல்வாக்கு அகில இந்திய அளவில் பெரும் அடி வாங்கியுள்ளது லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெரும் ஆரவாரத்துடன் ஆட்சியைப் பிடித்த உத்தரப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 20 சதவீத சரிவை மோடி செல்வாக்கு கண்டுள்ளது.

    லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் கடந்த 2017ம் ஆண்டு மூட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பை நடத்தியது. தற்போது 2வது கருத்துக் கணிப்பை அது நடத்தியுள்ளது.

    அதில் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உ.பியில் அது பெரும் சரிவை சந்தித்துள்ளது.

    ஆந்திராவிலேயே அடி

    ஆந்திராவிலேயே அடி

    ஆந்திராவில் 2017ல் நடத்தப்பட்ட முதல் கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கான ஆதரவு 48 சதவீதமாகவும், அதிருப்தி 38 சதவீதமாகவும் இருந்தது. தற்போது அது 37-52 என மாறியுள்ளது.

    கர்நாடகாவிலும் பலத்த அடி

    கர்நாடகாவிலும் பலத்த அடி

    கர்நாடகாவில் முதல் கருத்துக் கணிப்பில் ஆதரவு 73%, அதிருப்தி 20% என இருந்தது. தற்போது அது 51%, 40% என மாறியுள்ளது. விரைவில் சட்டசபைத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் பாஜகவுக்கு இது கெட்ட செய்தியாகும்.

    பரிதாப நிலையில் குஜராத்

    பரிதாப நிலையில் குஜராத்

    குஜராத்தில் பாஜக நிலைமை பரிதாபமாக உள்ளது. அங்கு முதல் கருத்துக் கணிப்பில் ஆதரவு 72, அதிருப்தி 20% என இருந்தது. தற்போது அது 57, 35 என மாறியுள்ளது. சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலிலேயே பாஜகவின் தடுமாற்றத்தை மக்கள் கண்டனர்.

    பயங்கர வீழ்ச்சியில் கேரள பாஜக

    பயங்கர வீழ்ச்சியில் கேரள பாஜக

    பாஜகவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு தொடர்கிறது. அங்கு முதல் கருத்துக் கணிப்பில் ஆதரவு 30, அதிருப்தி 54 என இருந்தது. தற்போது அதிருப்தி அதிகமாகி 66% சதவிதமாக உள்ளது. ஆதரவு 24%மாக குறைந்து போய் விட்டது.

    இதுதான் பாஜகவின் தமிழக நிலைமை

    இதுதான் பாஜகவின் தமிழக நிலைமை

    தமிழகத்திலும் பாஜகவுக்கு பாதகமான நிலையே தொடர்கிறது. அங்கு முதல் கருத்துக்கணிப்பில் ஆதரவு 31, அதிருப்தி 55 என இருந்தது. தற்போது அது 33, 52 என உள்ளது.

    உ.பியிலும் அடி

    உ.பியிலும் அடி

    உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. அங்கு முதல் கருத்துக் கணிப்பில் ஆதரவு 71, அதிருப்தி 21 என இருந்தது. தற்போது ஆதரவு 55 சதவீதமாக குறைந்து விட்டது. அதிருப்தி 37 சதவீதமாக உயர்ந்து விட்டது.

    English summary
    According to the Lokniti - CSDS survey PM Modi's popularity has come down in almost all the big states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X