For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமோக அறுவடை செய்யும்.. என்.டி.டி.வி. கருத்து கணிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்று என்.டி.டி.வி. கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக என்.டி.டி.வி. தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு நடத்தியது. தேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தமிழகத்தில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 32 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் என்.டி.டி.வி. கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மகா.வில் பாஜக அணிக்கு 33

மகா.வில் பாஜக அணிக்கு 33

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 33 தொகுதிகளை அதிரடியாக கைப்பற்றும் என்கிறது இந்த கருத்து கணிப்பு. பாஜக அணியில் சிவசேனா முக்கிய மாநில கட்சியாகும்.

காங் அணிக்கு 12

காங் அணிக்கு 12

இம்மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து 12 தொகுதிகளைத்தான் கைப்பற்ற முடியுமாம்.

ராஜ் தாக்கரேவுக்கு 1

ராஜ் தாக்கரேவுக்கு 1

ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுக்கு 1 தொகுதி கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

வாக்கு சதவீதம்..

வாக்கு சதவீதம்..

அதே நேரத்தில் வாக்கு சதவீதத்தைப் பார்த்தால் பாஜக அணிக்கு 39%, காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸுக்கு 35% வாக்குகள் இருப்பதாக கருத்து கண்காணிப்பு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to a NDTV opinion poll, BJP is set to sweep in one of big state Maharashtra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X