பாஜகவுக்கு மரண அடி கொடுத்த மம்தா.. இந்த முறையும் வாய்ப்பு இல்லை போலவே! இது வங்கத்து அரசியல்
கொல்கத்தா: இப்போது 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஆட்சியில் இருக்கிறது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவும் எட்டாத சில மாநிலங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் மேற்கு வங்கம். இந்த முறையும் கூட மேற்கு வங்கம் என்பது பாஜகவுக்கே சிக்கலாகவே இருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் போது தான் பிரதமர் மோடி முகத்தில் புன்னகை பூக்கும் என்று அவர் கூறியிருந்தார். அந்தளவுக்கு பாஜக மேற்கு வங்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறது.

மேற்கு வங்கம்
இருப்பினும், வங்கத்தில் திரிணாமுலை வீழ்த்துவது அவ்வளவு ஒன்றும் ஈஸியான காரியம் இல்லை. அங்கு இடதுசாரிகளும், காங்கிரசும் கிட்டத்தட்ட இல்லாத சூழல் உருவாகினாலும், மேற்கு வங்கத்தில் மம்தா வலிமையாகவே இருக்கிறார். ஒரு பக்கம் பானர்ஜியின் ஆளுமையும் இன்னொரு பக்கம் மக்கள் நலத் திட்டங்களும் மம்தாவின் இமேஜை உயர்த்துகிறது.
மம்தாவின் இந்த மூன்றாவது ஆட்சிக்காலம் முழுமையாகச் சுமுகமாக அமையவில்லை. சந்தேஷ்காலி வன்முறை, ஆர்.ஜி. கார் பாலியல் வன்புணர்வு-கொலை வழக்கு, ஆசிரியர் நியமன ஊழல் எனத் தொடக்கத்தில் திரிணாமுல் வரிசையாகச் சில பிரச்சனைகளை எதிர்கொண்டன. இருப்பினும், அதன் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் அந்தச் சிக்கல்களை எல்லாம் திரிணாமுல் ஒரு மாதிரி சமாளித்துவிட்டது.
மம்தா இமேஜ்
குறிப்பாக எஸ்ஐஆர் விவகாரம் வந்தவுடன் அரசியலையே மம்தா மொத்தமாக மாறிவிட்டார். நேரடியாகத் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குச் செல்வது, நீக்கப்பட்ட வாக்காளர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரஸ் மீட் கொடுப்பது, எல்லாவற்றுக்கும் மேல் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிடுவது என்று தான் வலிமையான தலைவர் என்பதை மீண்டும் காட்டினார்.
பாஜகவின் சிக்கல்கள்
மறுபுறம் பாஜகவுக்கும் மேற்கு வங்கத்தில் சிக்கல்கள் வரிசையாக உள்ளது. என்ன தான் மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி மற்றும் பீகார் வெற்றிகள் பாஜகவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தாலும், கட்டமைப்பு ரீதியாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் வலிமையாக இல்லை. கடந்த செப்டம்பரில் தான் மேற்கு வங்க மாநில பொறுப்பாளராக மூத்த பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான பூபேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டார். அவர் தொடக்கத்திலிருந்தே கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்த முயன்றுள்ளார். ஆனாலும் இன்னும் திரிணாமுல் அளவுக்கு வலிமையான கட்டமைப்பை பாஜகவால் உருவாக்க முடியவில்லை.
அதேபோல மம்தாவுக்கு சவால் கொடுக்கும் வகையில் ஒரு வலிமையான தலைவர் பாஜகவில் இல்லை. சுவேந்து அதிகாரி பிரபலமான தலைவராக இருந்தாலும் மம்தா அளவுக்கு அவரிடம் இமேஜ் இல்லை. மேலும், அவர் கடந்த தேர்தலில் தான் திரிணாமுலில் இருந்து பாஜகவுக்கு வந்தவர். இதனால் நீண்ட காலமாக பாஜகவில் இருக்கும் தலைவர்களும் அவர் மீது அதிருப்தி உள்ளது. இந்த இரு தரப்பிற்கும் இடையே அங்குத் தொடர் மோதலும் நிலவியே வருகிறது.
இந்து முஸ்லீம் கணக்கு
மேலும், மேற்கு வங்கத்தில் சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் வழக்கம் போல் மம்தாவுக்கே வாக்களிப்பார்கள். அங்குள்ள இந்து வாக்காளர்களும் பாஜக பக்கம் முழுமையாக இல்லை. முர்ஷிதாபாத், மால்டா, மற்றும் உத்தர தினாஜ்பூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் இந்துக்கள் வாக்கும் மம்தா வசமே செல்கிறது.
மம்தா சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேநேரம் ஜகன்னாதர் கோவில் மற்றும் காளி பூஜை விவகாரங்களில் தொடர்ந்து களத்திலேயே இருக்கிறார். மேலும், குறிப்பாக மேற்கு வங்கத்தில் முக்கிய பண்டிகையான இருக்கும் காளி பூஜைகளில் அவரே நேரடியாகப் பூஜையும் செய்கிறார். இதனால் பாஜகவால் இந்துக்கள் வாக்குகளைத் தங்கள் வசம் இழுக்க முடிவதில்லை. இப்படி பாஜகவுக்குப் பல சவால்களை மேற்கு வங்கம் தருகிறது. இதைத் தாண்டி பாஜகவால் சாதிக்க முடியுமா.. இல்லை இந்த முறையும் அங்கு மம்தா கை தான் ஓங்குமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.
-
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications