திருப்பதி: இஸ்கான் கோயில் அருகே குண்டுவெடித்ததாக பரபரப்பு
திருப்பதி: திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயில் அருகே இன்று காலை வெடிச்சத்தம் கேட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பரபரப்படைந்தனர். வெடித்தது வெறும் பட்டாசுதான் என்று தெரியவரவே பக்தர்கள் நிம்மதியடைந்தனர்.
திருப்பதி ரயில் நிலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கபிலத்தீர்த்தம் செல்லும் பாதையில் உள்ளது இஸ்கான் கோவில். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினாரால் கட்டப்பட்ட இந்த கோயில் கலையம்சம் கொண்டது. இதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் இஸ்கான் கோவிலுக்கு சென்று வருவது வழக்கம்.

இன்று காலையில் கோவில் அருகே திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அப்போது நாட்டு குண்டு வெடித்ததாக முதலில் தகவல் வெளியானது. இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுடன் விரைந்துவந்த போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது, திருவிழாக் காலங்களில் பயன்படுத்தும் பட்டாசு வெடித்தது தெரியவந்தது. திடீர் வெடிச்சத்தம் கேட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பீதியடைந்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்தப் பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications