நேரு-இந்திரா குடும்பம் பற்றி சர்ச்சை கருத்து.. பிரபல பாலிவுட் நடிகை பாயல் ரோஹத்கி கைது
ஜெய்ப்பூர்: நேரு குடும்பம் பற்றி அவதூறாக கருத்துக்களை சமுக வலைதளங்களில் பதிவிட்ட நடிகை பாயல் ரோஹத்கியை ராஜஸ்தான் மாநில போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் வசிப்பவர் பிரபல பாலிவுட் நடிகை பாயல் ரோஹத்கி. இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் ஆவார்.
நடிகை பாயல் ரோத்தகி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சையான கருத்துகளை அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் இவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைப்பதும் வழக்கம்.

காங்கிரஸ் புகார்
கடந்த செப்டம்பர் 6 மற்றும் 21ம் தேதிகளில் பாயல் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்று வெளியிட்டார். அந்த வீடியோவில் மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய அவதூறான தகவல்கள் இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோவை பார்த்து கொதித்துப்போன காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு எதிராக போலீசார் புகார் அளித்தனர்.

போலீஸ் வழக்கு
ராஜஸ்தான் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சர்ரமேஷ் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தகவல் தொழில்நுப்ட சட்டத்தின் கீழ் கடந்த அக்டோபரில் வழக்கு பதிவு செய்த ராஜஸ்தான் போலீசார், நடிகை பாயல் ரோஹத்கிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.

குஜராத்தில் கைது
இதற்கு நடிகை பாயல் விளக்கம் அளிக்காமல் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால ராஜஸ்துன் மாநில போலீசார் நேற்று அஹமதாபாத் சென்ற பாயலை பிடித்து சென்றனர். அவரிடம் ராஜஸ்தானின் பந்தி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பாயல் கருத்து
இதுபற்றி நடிகை பாயல் தனது டுவிட்டர் பக்கத்தில், கூகுளின் வந்த தகவலின் அடிப்படையில் வெளியிட்ட வீடியோவுக்காக ராஜஸ்தான் போலீசார் என்னை கைது செய்திருக்கிறார்கள். பேச்சு சுதந்திரத்திற்காக கேலிக்கூத்து என்று விமர்சித்துள்ளார்.

அழைத்தோம்
இதனிடையே ராஜஸ்தான் மாநிலம் பாந்தி மாவட்ட எஸ்பி மம்தா குப்தா கூறுகையில், பாயலை முறைப்படி இன்னும் கைது செய்யவில்லை. விசாரணைக்காக அழைத்து வந்துள்ளோம் என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications